காண்டாமிருகம் பற்றி அறிய வேண்டிய 15 தகவல்கள்

காண்டாமிருகத்தின் தகவல்களை  பற்றி அறிவதற்காக ஒவ்வொரு வருடமும்  செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது. காண்டாமிருகங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 15 தகவல்கள்…

  1. உலக காண்டாமிருக நாளானது 2010 ஆம் ஆண்டு முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. அரிதாக இருக்கும் விலங்குகளின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம், தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா போன்ற தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
  3. கருப்பு நிறம் , வெள்ளை நிறம் , ஒற்றைக் கொம்பு வகை , சுமத்திரன் வகை மற்றும் ஜாவா என காண்டாமிருகங்களில் 5 வகைகள் மொத்தம் உள்ளன.
  4. இந்தியாவில் வாழ்ந்து வரும் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவைகள் ஆகும். ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் இரண்டு கொம்புகள் கொண்டன.
  5. நிலத்தில் வாழ்ந்து வரும் விலங்குகளில் இரண்டாவது பெரிய உயிரி காண்டாமிருகங்கள்தான்.
  6. எல்லா வகையான காண்டாமிருகங்களுமே 1000 கிலோ எடைக்கும் அதிகமான எடை கொண்டவையாக தான் உள்ளன.
  7. மத்திய ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வரும் வெள்ளைக் காண்டாமிருகங்கள் 2,400 கிலோவும், இந்திய காண்டாமிருகம் 2,300 கிலோவும் எடை கொண்டவை.
  8. இவை பொதுவாக ஆறு அடி உயரம் வரை வளரும் அமைப்பை கொண்டுள்ளன.
  9. இந்தியாவில் மொத்தமாக 2,800 காண்டாமிருகங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
  10. உலக வர்த்தக தொழிலில் யானைகளின் தந்தத்துக்கு நிகரான விலையில் காண்டாமிருக கொம்புகள் கிடைப்பதால் கொம்புக்காக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன..
  11. காண்டாமிருகங்கள் தோராயமாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை வாழும்.
  12. காண்டாமிருகத்தின் மொத்த கர்ப்பக்காலம் 1.3 வருடங்கள் ஆகும்.
  13. பெண் காண்டாமிருகம் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி போடும் தன்மை கொண்டவை.
  14. தற்போது பிறந்த காண்டாமிருகம் குட்டியின் எடையானது 40 முதல் 60 கிலோ வரை எடை இருக்கும்.
  15. ஒரு பிரசவத்தில் ஒரு கன்று மட்டுமே பிறக்கும்.

Latest Slideshows

Leave a Reply