3000 Bonds Pending In Apartment Projects : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் 3000 பத்திரங்கள் பதிவுக்கு காத்திருக்கின்றன

3000 Bonds Pending In Apartment Projects :

கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக்குழு கடந்த மார்ச் 30-ம் தேதி சுற்றறிக்கை (3000 Bonds Pending In Apartment Projects) வெளியிட்டிருந்தது. இதையடுத்து சொத்துகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இந்த சுற்றறிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  கிரெடாய் என்று சொல்லக்கூடிய இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு உள்பட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தன. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்ட விதிகளின்படி துணைக்குழுக்களை அமைத்து அறிக்கைகள் பெற்று அவற்றை மறு ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன் பிறகே வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க இயலும். உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்கிறேன்.

மேலும் புதிய விதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவரைக்கும் கடந்த 2017-ம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில் அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. 2022 ஏப்ரலுக்கு முந்தைய மதிப்புகள் மறுபடியும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் பதிவுத்துறை அதிகாரிகள் மௌனமாக இருப்பதால் இதனால் பத்திர பதிவு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த சுற்றறிக்கை ரத்தான பிறகு பத்திரங்களை பதிவு செய்ய சார் பதிவாளர்கள் தயங்குவதாகவும் பொதுமக்களும் எந்த மதிப்பு அடிப்படையில் கிரைய பத்திரங்களை தயார் செய்வது என்பது தெரியாமல் தவிப்பதால் மக்கள் குழப்பத்தை பதிவுத் துறை தீர்க்க வேண்டும் என்றும் இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி திரு.ராமபிரபு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தற்போது மீண்டும் மற்றொரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதில் உயர்நீதிமன்ற பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறை மௌனமாக இருப்பது நல்லதல்ல. இதனால் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும்  குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனை தொடர்பாக 3,000 பத்திரங்கள் பதிவுக்கு (3000 Bonds Pending In Apartment Projects) காத்திருக்கின்றன. எந்த வழிகாட்டி மதிப்பை ஏற்பது என்பது தெளிவானால் இந்த பத்திரங்கள் அனைத்தும் உடனடியாக பதிவுக்கு வரும்.

மேலும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான CMDA நகர் ஊரமைப்பு துறையான DTCP ஆகியவற்றில் ஓஎஸ்ஆர் எனப்படும் திறந்தவெளி நில ஒதுக்கீட்டுக்கான கட்டணம் மற்றும் கூடுதல் தள பரப்பு அனுமதிக்கான பிரீமியம் FSI கட்டணங்கள் வசூலிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பதிவுத்துறை அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார். சுற்றறிக்கையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதுமே இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது ஹைகோர்ட் தீர்ப்பு அடிப்படையில் சார் பதிவாளர்களுக்கு என்ன அறிவுறுத்தல்களை வழங்குவது என்பது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம். உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறியிருந்தார்.

Latest Slideshows

Leave a Reply