Registration Department One Day Revenue : பத்திரப்பதிவு வரலாற்றில் ரூ.217 கோடி வசூல் சாதனை

Registration Department One Day Revenue - பத்திரப்பதிவு வரலாற்றில் வசூல் சாதனை | ஒரே நாளில் ரூ.217 கோடிக்கு பத்திரப்பதிவுகள் :

தமிழக அரசு பத்திரப்பதிவு துறை ஆனது பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தமிழக அரசு பத்திரப்பதிவுத் துறை தற்போது ஒரு மகிழ்ச்சி செய்தியை (Registration Department One Day Revenue) வெளியிட்டிருக்கிறது.

பத்திரப்பதிவு துறை ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது :

தற்போது தமிழக அரசில் உள்ள மற்ற துறைகளைப் போலவே பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க ஆன்லைன் மயமாகிவிட்டது. அதேபோல, பத்திரப்பதிவு துறை ஆனது மற்ற துறைகளைப் போலவே ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த 2023 – 2024-ஆம் வருடம் ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த 2024-ஆம் வருடம் இதுவரை ரூ.8,000 கோடி கூடுதல் வருவாய் பத்திரப்பதிவுத் துறைக்கு கிடைத்துள்ளது. எனவே, பத்திரப்பதிவுத் துறை ஆனது அதன் இலக்கை எட்டி பயணப்பட்டு வருகின்றது. அதற்காகவே பத்திரப்பதிவுத் துறை ஆனது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன்கள் ஆனது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதனால் அந்த சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடைபெற்று கூடுதல் வசூல் ஆனது கிடைத்து வருகின்றது. இதைப்போலவே, மக்கள் சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பத்திரப்பதிவுத்துறை கடந்த தை மாதம் வெளியிட்டிருந்த கூடுதல் டோக்கன்கள் முக்கிய சலுகை ஆனது பொங்கலுக்குப் பிறகு ஜனவரி 31 வரை அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்பதாகும். கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப்பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

ஜனவரி 31-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்ட  நிலையில் கடந்த 22ம் தேதி மட்டுமே 21,004 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்னையில் ஜனவரி 22-ம் தேதி புதிய கூட்டு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூ.12 கோடி வருவாயும் இதில் அடங்கும். பத்திரப்பதிவு எண்ணிக்கைகள் இனி வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று பதிவுத்துறை நம்புகிறது. சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 26,000 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.217 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை (Registration Department One Day Revenue) படைத்துள்ளது. இது பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் படைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply