Asus ZenBook Dual Touch Display Laptop ஆசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

இந்த 2024-ம் ஆண்டில் இனி உலகளவில் மக்கள் டூயல் டிஸ்பிளே கொண்ட லேப்டாப் (Laptop) சாதனத்தை பயன்படுத்த போகிறார்கள். 2 டிஸ்பிளேவுடன் தனியாக பிரித்தெடுக்க கூடிய கீபோர்ட் டிவைஸுடன் புதிய லேப்டாப் சாதனத்தை Asus நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆசஸ் நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் அதன் CES 2024 நிகழ்வில் புதிய உலகின் முதல் ‘டூயல் டச் டிஸ்பிளே லேப்டாப்’ (Asus ZenBook Dual Touch Display Laptop) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் இதை நீங்கள் 5 இன் 1 சாதனமாக பயன்படுத்தலாம்.

இது டூயல் ஸ்கிரீன் மோட் (Dual Screen Mode), லேப்டாப் மோட் (Laptop Mode), டூயல் ஸ்க்ரீன் கீபோர்ட் மோட் (Dual Screen Keyboard Mode), டெஸ்க்டாப் மோட் (Desktop Mode) மற்றும் ஷேரிங் மோட் (Sharing Mode) போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் இதை வழக்கமான லேப்டாப் சாதனம் போல ஒரே ஒரு டிஸ்பிளே மற்றும் கீபோர்ட் உடன் பொதுவான டிசைனுடன் பயன்படுத்த முடியும். மறுபுறம் இரண்டு டிஸ்பிளேவையும் பிரித்து பெரிய ஒரே டிஸ்பிளேவாக மாற்றியும் பயன்படுத்தலாம்.

Asus ZenBook Dual Touch Display Laptop சிறப்பம்சம் :

இந்த Dual Touch Display லேப்டாப்பில் கீபோர்ட்டை தனியாக கீழே பொருத்தியோ அல்லது பிளோட்டிங் கீபோர்ட் (Floating Keyboard) சாதனமாகவோ பயன்படுத்தலாம். இதை நீங்கள் டூயல் டிஸ்பிளே டேப்லெட் (Asus ZenBook Dual Touch Display Laptop) போல பயன்படுத்தலாம். இந்த புதிய வடிவமைப்பு CES 2024 நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லேப்டாப் சாதனங்கள் வருங்காலங்களில் எப்படி உருமாற போகிறது என்பதை ஆசஸ் நிறுவனம் நமக்கு தெளிவாக காண்பித்துவிட்டது.

கடந்த 2023 ஆண்டில் ஆசஸ் நிறுவனம் இந்த வடிவமைப்பின் கான்செப்ட் (Concept) மாடலை லீக் செய்திருந்தது. அதனுடன் ஓப்பிடும்போது ஆசஸ் நிறுவனம் மிக தீவிரமாக வேலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய கான்செப்ட் மாடலை விட Asus ZenBook Dual Touch Display Laptop (2024) மாடலை பல மடங்கு மேம்படுத்தலுடன் இரண்டு டச் டிஸ்பிளேவுடன் ஆசஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த Dual Touch Display லேப்டாப் 14 இன்ச் 3K OLED டிஸ்பிளேவுடன் (14-Inch 3K OLED Display) வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் அம்சத்துடன் (120 Hz Refresh Rate) வருகிறது. இது 19.8 இன்ச் அளவிற்கு விரிவாக கூடிய வொர்க்ஸ்பேஸ் அம்சத்துடன் அறிமுகமாகிறது.

இந்த Asus ZenBook Dual Touch Display Laptop சாதனம் இன்டெல் கோர் அல்ட்ரா 9 பிராசஸர் (Intel Core Ultra 9 Processor) உடன் வருகிறது. இது 32GB LPDDR 5x ரேம் உடன் 2 TB வரையிலான ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது டச் கண்ட்ரோல், கெஸ்டர் கண்ட்ரோல் (Gesture Control), வாய்ஸ் அசிஸ்டன்ட், ஏஐ (AI) ஆதரவு என்று பல அதிநவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது. மேலும் இதுவொரு எதிர்கால லேப்டாப் மாடல் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த லேப்டாப் (Asus ZenBook Dual Touch Display Laptop) உடன் வரும் கீபோர்ட் சாதனம் ஒரு ப்ளூடூத் கீபோர்ட் (Bluetooth Keyboard) என்பதால் இதை எப்போது வேண்டுமானாலும் பிரித்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த லேப்டாப் இல் இருக்கும் மற்றொரு டிஸ்பிளேவையும் நீங்கள் விர்ச்சுவல் கீபோர்ட் சாதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த லேப்டாப் 13.5 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என ஆசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த லேப்டாப் டால்பி அட்மாஸ் சவுண்ட் உடன் வருகிறது. இந்த லேப்டாப்பில் சவுண்ட் சிஸ்டத்தை ஹர்மான் கார்டன் (Harman Kardon) டியூன் செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply