Moto G24 Power ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 30-ம் தேதி இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது Moto G24 Power ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் Moto G24 Power போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு அதன் அனைத்து முக்கிய விவரங்களும் வெளியாகி உள்ளது.

மோட்டோ ஜி24 பவர் சிறப்பம்சங்கள் (Moto G24 Power Specifications) :

  1. Moto G24 Power Phone Display : 6.5 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. 1612×720 பிக்சல்ஸ் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90Hz ரெஃப்ரெஷ்ரேட் உடன் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே அமைப்புடன் இந்த Moto G24 Power போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மீடியாடெக் ஹீலியோ G85 எஸ்ஒசி (MediaTek Helio G85 SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி மாலி G52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த Moto ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

  2. Moto G24 Power Phone Storage : 4GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

  3. Moto G24 Power Phone Colors : கிளாசியர் ப்ளூ (Glacier Blue) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) நிறங்களில் இந்த அசத்தலான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என  மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  4. Moto G24 Power Phone Camera : 50MB மெயின் கேமரா + 2MB மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16MB கேமரா இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா சிறப்பம்சங்கள் இந்த போனில் உள்ளன.

  5. Moto G24 Power Phone Battery : இந்த மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி வசதி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

  6. Moto G24 Power Phone Rate : இந்தியாவில் மோட்டோ ஜி24 பவர் போன் குறைந்த பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் இந்த புதிய மோட்டோ போன் விற்பனைக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply