5 New Phones Launching In February 2024 : பிப்ரவரியில் அறிமுகமாகும் 5 புதிய போன்கள்
பிப்ரவரி 2024 (February 2024) மாதம் பல எண்ணிக்கையிலான புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்தை காண உள்ளது. பிப்ரவரி 2024-ல் 5-க்கும் மேற்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் (5 New Phones Launching In February 2024) அறிமுகமாக உள்ளன.
5 New Phones Launching In February 2024 :
- ஹானர் எக்ஸ்9பி (Honor X9b) : இந்த ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இது 108MB மெயின் கேமரா 5800mAh பேட்டரி மற்றும் 6.78-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 7.2 போன்ற முக்கிய அம்சங்களுடன் அறிமுகமாகிறது. இந்தியாவில் இது ரூ.30,000/-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) : இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மற்றும் டூயல்-டோன் வேகன் லெதர் பேக் பேனல் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ், 50MB டூயல் ரியர் கேமரா 5000mAh பேட்டரி, 144 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களுடன் அறிமுகமாகிறது. இந்த போன் இந்தியாவில் ரூ.40,000/-க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகிறது.
- ஹானர் மேஜிக் 6 சீரீஸ் (Honor Magic 6 Series) : ஹானரின் இந்த புதிய மேஜிக் 6 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 25 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடலானது ரூ.65,000/-க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) : நத்திங் நிறுவனத்தின் இந்த குறைந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள எம்டபுள்யூசி 2024 நிகழ்வின் (MWC 2024 Event) போது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் 2ஏ மாடலானது 50MB மெயின் கேமரா + 50MP அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா மற்றும் 120Hz அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 32MB அல்லது 16MB செல்பீ கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களுடன் அறிமுகமாகிறது. இந்த போன் இந்தியாவில் ரூ.33,000/-க்குள் என்ற விலையில் வெளியாகிறது.
- ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) : பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29 வரை பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் Mobile World Congress (MWC) 2024 நிகழ்வின் போது உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12GB RAM + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.74,990/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்