Samsung Galaxy XCover 7 : சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கடந்த ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான Samsung Galaxy XCover 7 ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத் தரமான MIL-STD-810H3-ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி உயர்ந்த  மற்றும் குறைந்த தீவிர வெப்பநிலையிலும் இதனால் வேலை செய்ய முடியும்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் (Samsung Galaxy XCover 7 Specifications) :

  1. Samsung Galaxy XCover 7 Display : 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே (TFT LCD Display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. 6100 மீடியாடெக் டைமன்சிட்டி பிளஸ் பிராசஸர் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் வெளிவந்துள்ளது. இந்த Processor மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த Samsung Galaxy போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒன் யுஐ (OneUI) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த Samsung Galaxy XCover 7 மாடல் வெளிவந்துள்ளது.

  2. Samsung Galaxy XCover 7 Storage : 6GB RAM மற்றும் 128GB மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 1TB  வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) ஆதரவு இதில் உள்ளது.

  3. Samsung Galaxy XCover 7 Camera : எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 50MB ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 15MB கேமரா இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது. 5000mAh மாற்றக்கூடிய பேட்டரி (5000mAh Replaceable Battery) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போன் வெளிவந்துள்ளது.

  4. Samsung Galaxy XCover7 Rate : சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 போனின் ஸ்டாண்டர்ட் எடிஷன் (Standard Edition) விலை ரூ.27,208/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் எண்டர்பிரைஸ் எடிஷன் (Enterprise Edition) விலை ரூ.27,530/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டாண்டர்ட் எடிஷன்போனுக்கு (Samsung Galaxy XCover 7) 1 வருடம் வாரண்டி உள்ளது. இதன் எண்டர்பிரைஸ் எடிஷன்-க்கு 2 வருடம் வாரண்டி உள்ளது.

Latest Slideshows

Leave a Reply