Budget 2024 Real Estate Announcements : 2024-2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரும் மாற்றம்

Budget 2024 Real Estate Announcements :

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக (Budget 2024 Real Estate Announcements) பட்ஜெட்டுக்கு முந்தை எதிர்பார்ப்புகள் தெரிவிக்கின்றன. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் (Budget 2024) மீது நாடே எதிர்பார்த்து காத்து இருக்கிறது. ஆட்சியை தக்க வைக்கும் விதமாக சாமானிய மக்களை கவரும் வகையில் இந்த 2024 – 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடைக்கால பட்ஜெட்டில் (Interim Budget 2024) ரியல் எஸ்டேட் துறையே மிகுந்த கவனம் பெற்றுள்ளது. காரணம் ஆடம்பரம் மற்றும் உயர்தர வீட்டுக் கடன்களுக்கான பிரிவில் கடன் வாங்கும் செயல்பாடுகள் அதிகரித்துவிட்ட நிலையில் மலிவு விலை வீட்டுக் கடன்களுக்கான தேவையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிலம் மற்றும் கட்டுமான செலவுகளின் அதிகரிப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக சாமானிய மக்கள் வீட்டு கடன்கள் மீது அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. ஆகவே இந்த பட்ஜெட்டில் மலிவு விலை வீட்டுக் கடன்களுக்கான விதி விலக்குகள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட்டியில் பெரிய மாற்றங்கள் வரலாம். இது ரியல் எஸ்டேட் துறையில் குறுகிய கால வளர்ச்சியை எட்ட உதவும். மேலும்  வீட்டுக் கடனில் விதிக்கப்படும் வட்டிக்கான விலக்குகள் அதிகரிக்கப்படும் என்று (Budget 2024 Real Estate Announcements) எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் நகர்ப்புற வீட்டு வசதியை மேம்படுத்த கட்டுமானப் பொருள்கள் மீதான வரியானது 28% சதவீதத்தில் இருந்து 18% சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர். 

மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு அதற்கான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  வாடகை வீட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வீடுகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வாடகை வருமானத்துக்கு 100% விலக்கு அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு.ஷிஷிர் பைஜால் தெரிவித்துள்ளார். வீட்டுக் கடன் வரி தள்ளுபடிகள் குறித்த அறிவிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறை முதலீடுகள் அதிகரிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெற அதிக  வாய்ப்புள்ளது. மலிவு விலை வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை முதலீடுகள் மற்றும் வீட்டுக் கடன் வரி தள்ளுபடிகள் ஆகியவையே இந்த 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்புகளாக (Budget 2024 Real Estate Announcements) இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால் நிச்சயமாக இந்த துறையில் மக்களை அதிருப்தி ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பில்லை என்றும்  கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply