Housing Price Rise In Kilambakkam : கிளாம்பாக்கத்தில் வீட்டுமனைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது

Housing Price Rise In Kilambakkam :

நாளுக்கு நாள் வளரும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் குடியேறுவதை விரும்புவதால் வீட்டுமனைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகள் முன்பு வரை கிராமம் போல் காட்சி அளித்த கிளாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆனது தற்போது மாறி வருகின்றன. இந்த கிளாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள் தற்போது நகரம் போல் மாற ஆரம்பித்துள்ளதால் இங்கே வீட்டு மனைகளின் தேவையும் மற்றும் விலையும் கிடுகிடுவென்று (Housing Price Rise In Kilambakkam) அதிகரித்துவிட்டது.

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையமானது வரப்போகின்றது என்ற செய்தி ஆனது சில ஆண்டுகள் முன்னதாக வெளியான உடனேயே இங்கே வீட்டு மனைகளின் விலை கிடுகிடுவென்று (Housing Price Rise In Kilambakkam) அதிகரித்துவிட்டது. கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் வரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான ஆரம்ப நிலையில் ஒரு சதுர அடி ரூ.250/- ஆக இருந்த வீட்டு மனைகளின் விலை ஆனது ரூ.750/- ஆக உயர்ந்தது. இப்போது கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் ஆனது கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், ஒரு சதுர அடியின் விலை ஆனது ரூ.4000/- வரை (Housing Price Rise In Kilambakkam) உயர்ந்துள்ளது.

ஐந்து ஆண்டுகள் முன்னதாக 2019-ல் ஒரு சதுர அடி 1500 ரூபாய் இருந்த வீட்டு மனைகளின் விலை இன்று 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது வீட்டு மனைகளின் விலை ஆனது 100%-க்கு மேல் உயர்ந்துள்ளது. ஒருவர் 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி இருந்தால் இன்று 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம். அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும். ரியல் எஸ்டேட் அமைப்புத் தலைவர் கண்ணன், “இந்தப் பகுதியில் ஆரம்பத்தில் வீட்டு மனைகள் வாங்கியவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்களாகத்தான் இருப்பார்கள். சென்னையில் மையப்பகுதியில் வாங்க முடியாத நடுத்தர மக்கள் இங்கே கிளாம்பாக்கத்தில் வந்து வாங்கி இருப்பார்கள். அவர்களது அன்றைய முதலீடுகள் இன்று நல்ல மதிப்பைப் பெற்றுள்ளன. ஆகவே, இது மகிழ்ச்சி தரும்  ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்” என்கிறார்.

Confederation Of Real Estate Developers Association Of India (CREDAI) (இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய்) ஆனது ரியல் எஸ்டேட் தொழிலானது இந்த கிளாம்பாக்கம் சுற்றி உள்ள பகுதிகளில் மிகவேகமாக வளர்ந்து வருவதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இந்த கிளாம்பாக்கம் நிலத்தின் மதிப்பு இரு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கிளாம்பாக்கம்  அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையும் அதிகரித்து உள்ளது. மீனம்பாக்கம் விமானநிலையம் மெட்ரோ சேவையை கிளாம்பாக்கம் வரை தற்போது நீட்டிக்க உள்ளதால் போக்குவரத்து இங்கே இன்னும் எளிதாகிவிடும். இதன் காரணமாக இங்கே கிளாம்பாக்கம் தொடங்கி, தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் வரையான வளர்ச்சிகள் ஆனது இன்னும் சிறப்பாக அதிகரிக்கும்.

Latest Slideshows

Leave a Reply