Mumbai The World's Top 8 Real Estate Market : உலகின் டாப் 8 ரியல் எஸ்டேட் சந்தைகளில் ஒன்றாக "மும்பை" உருவெடுத்துள்ளது

Mumbai The World's Top 8 Real Estate Market :

சுதந்திர இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளது. உலக அளவில் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் மும்பை 8-வது இடத்தை (Mumbai The World’s Top 8 Real Estate Market) பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 37-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஒரே ஆண்டில் 29 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளது. நைட் பிரான்க் என்ற அமைப்பு The Wealth Report 2024 என்ற அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த 2022 ஆம் ஆண்டு 37-வது இடத்தில் மும்பை இருந்தது. ஆனால் தற்போது ஒரே ஆண்டில் 29 இடங்கள் முன்னேறி 8-வது இடம் (Mumbai The World’s Top 8 Real Estate Market) பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மும்பையில் சொத்துக்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்தது ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாகும். மும்பையில் 1,108 சதுர அடி நிலம் வாங்குவதற்கு சுமார் 8.24 கோடி ரூபாய் தேவைப்படுவதாக இந்த நைட் பிரான்க் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொனோகா நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனோகாவில் 172 சதுர அடி நிலம் வாங்குவதற்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிட வேண்டுமாம். அதாவது நம் இந்திய மதிப்பில் 8.27 கோடி ரூபாய் என்பதே இதன் மதிப்பாகும். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் ஹாங்காங் உள்ளது. ஹாங்காங்கில் 236 சதுர அடி நிலம் வாங்குவதற்கு 1 மில்லியன் டாலரை செலவிட வேண்டியிருக்கும்.

இந்தியாவின் ஐடி தலைநகரம் :

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இங்கு 344 சதுர அடி நிலம் வாங்குவதற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிட வேண்டும். இந்த பட்டியலில் மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் தலைநகரமான டெல்லி 37-வது இடத்தில் உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் டெல்லி 77-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 40 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தியாவின் மின்னணு தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர் இந்த பட்டியலில் 59-வது இடத்தில் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 63-வது இடத்தில் பெங்களூர் இருந்தது. ஒரே ஆண்டில் 2.2 சதவீதம் பெங்களூரில் நிலத்தின் சந்தை மதிப்பானது உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள பிற நகரங்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் 5-வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து ஏதென்ஸ் நகரம் 6-வது இடம் வகிக்கிறது. 7-வது இடத்தில் இபிஷா தீவும் மற்றும் 9-வது இடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரமும் உள்ளது. அதேபோல் முஸ்டிக் நகரமும் 9-வது இடத்தில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply