பலருக்கும் தெரியாத Tata's XPRES-T EV Car பற்றிய தகவல்கள்

Tata's XPRES-T EV Car பற்றிய தகவல்கள்

இப்படி ஒரு XPRES-T EV எலெக்ட்ரிக் கார் Tata-வில் இருப்பதே பலருக்கும் தெரியாது. ஜூலை 2021-ல் XPRES-T EV கார் ஆனது லாஞ்ச் ஆகி உள்ளது. 25.5kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்ட இந்த XPRES-T EV கார் ஆனது டாடாவின் ஜிப்ட்ரான் ஆர்க்கிடெக்ச்சர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த Tata’s XPRES-T EV Car ஆனது Single Charge-ஜுக்கு, MIDC Cycle படி 277 கிமீ போகும்.

சில வாடிக்கையாளர்கள் ரியல் டைமில் இது 200 கிமீ போவதாகச் சொல்கிறார்கள். இந்த Tata’s XPRES-T EV Car 15Amp ப்ளக் பாயின்ட்டில் நார்மல் சார்ஜ் செய்தால், சார்ஜ் ஆக 11 மணி நேரம் ஆகும். இந்த XPRES-T EV எலக்ட்ரிக் காரில் இரு பேட்டரி தேர்வுகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 16.5 kWh பேட்டரி தொகுப்பு சிங்கிள் சார்ஜில் அதிகப்பட்சமாக 165 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. அதுவே பெரிய அளவிலான பேட்டரி தேர்வான 21.5 kWh மூலம் 213கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்ல முடியும். இந்த XPRES-T EV காரின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 15 லட்சம் ஆகும்.

இந்த XPRES-T EV கார் T Board காராக மட்டும்தான் விற்பனைக்குக் கிடைக்கும்

டிகோர் எலெக்ட்ரிக்கின் டாக்ஸி வெர்ஷன்னான இந்த XPRES-T EV கார் T Board காராக மட்டும்தான் விற்பனைக்குக் கிடைக்கும். இதை மக்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வாங்கி ஓட்ட முடியாது. அதனால்தான் இந்த XPRES-T EV காரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கேயாச்சும் மக்கள் ரோட்ல இந்த XPRES-T EV காரைப் பார்த்தாதான் உண்டு. ஆனால், டாக்ஸி மார்க்கெட்டில் இந்த XPRES-T EV காரைப் பற்றிப் பலருக்கும் தெரியும். இந்த Tata’s XPRES-T EV Car வாடிக்கையாளர்களுக்குச் நல்ல சேவிங்ஸை வழங்கி வருகிறது.

இந்தியாவில் தலைநகர் டெல்லியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு விரிவடைந்து வருகிறது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெல்லியில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக ப்ளு ஸ்மார்ட் மொபைலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது. இந்த கூட்டணியின்படி, இந்த நிறுவனத்திற்கு 3,500 எக்ஸ்.பிரெஸ்-டி எலக்ட்ரிக் செடான் கார்களை டாடா நிறுவனம் வழங்கவுள்ளது. Vertelo ஃப்ளீட் ஆபரேட்டிங் நிறுவனம் 2000 கார்களை ஆர்டர் செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply