Xiaomi SU7 Sedan Electric Car Introduction : Xiaomi நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான SU7 செடான் அறிமுகம்
டெஸ்லாவுக்கு போட்டியாக Xiaomi நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் SU7 செடான் அறிமுகம் - Xiaomi SU7 Sedan Electric Car Introduction
Xiaomi கடந்த மூன்று வருடங்களாக உன்னிப்பாக வடிவமைத்த தனது முதல் மின்சாரக் காரான SU7ஐ சீனாவின் பெய்ஜிங்கில், CEO Lei Jun தலைமையில் ஒரு நிகழ்வில் வெளியிட்டது. CEO Lei Jun தங்களது SU7 ஐ “கனவு கார்” என்று பெருமையுடன் அழைத்தார். இந்த Xiaomi SU7 கார் ஆனது பார்ப்பதற்கு Tesla மாடல் S போலவே உள்ளது. இந்த Xiaomi SUV7 மின்சார காரை உற்பத்தி செய்ய சீனாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான Beijing Automotive Group Co. Ltd-உடன் Xiaomi ஆனது இணைந்துள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi ஆனது Beijing Automotive Group Co. Ltd-ன் ஒப்பந்தப்படி தயாரிக்கும். எலக்ட்ரிக் செடான் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான Mi கீழ் Xiaomi SUV7 விற்பனை செய்யப்படும். டெஸ்லாவுக்கு போட்டியாக Xiaomi ரூ.25 லட்சத்தில் எஸ்யூ7 எலக்ட்ரிக் காரை அறிமுகம் (Xiaomi SU7 Sedan Electric Car Introduction) செய்துள்ளது. டெஸ்லாவின் அதே மாடல் எலக்ட்ரிக் கார் 3 (Model S) ரூ.28.3 லட்சம் விலையில் வருகிறது.
Xiaomi SU7 மின்சார காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
- இந்த கார் CTB (Cell to Body) என்ற புதிய பேட்டரி டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த கார் 5 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலம் கொண்டிருக்கிறது.
- இந்த காரின் எடை 1,980-2,205 கிலோ ஆகும்.
- இந்த கார் SU7, SU7 Pro மற்றும் SU7 Max ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கும்.
- இந்த கார் 73.6 KWH பேட்டரி பேக் வசதி மற்றும் 101 KWH பேட்டரி பேக் வசதி என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- இந்த காரை ஒருமுறை சார்ஜிங் செய்தால் 800 கிலோமீட்டர் தூரம் ரேஞ்சு செல்லமுடியும்.
- இந்த காரின் அதிகபட்ச Torque 635 NM மற்றும் அதிகபட்ச Speed 210 KMH.
- Autonomous Driving வசதிகள் மற்றும் Self Driving Technology வசதிகள் உள்ளது.
- 1-இன்ச் 3K சென்ட்ரல் கன்சோல், 7.1-இன்ச் சுழலும் டாஷ்போர்டு மற்றும் 56-இன்ச் HUD (ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே) உள்ளது.
- அதிக திறன் கொண்ட Camera மற்றும் Ultrasonic Sensor உள்ளிட்டவை இருக்கின்றன.
- இந்த கார் 3000mm Wheel Base கொண்டிருக்கிறது (3 Meter Wheel Base).
- Xiaomi SU7 9 வண்ணங்களில் வருகிறது. கடந்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற MWCயின் போது, Xiaomi காரின் மூன்று வண்ண விருப்பங்களைக் காட்டியது. இப்போது, மேலும் 6 விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei ஏற்கனவே அதன் எலக்ட்ரிக் கார்களை உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டது. BMW i4 மற்றும் Tesla Model 3 போன்றவற்றுக்கு Xiaomi SUV7 போட்டியாக (Xiaomi SU7 Sedan Electric Car Introduction) உள்ளது.
Latest Slideshows
-
11733 Crore Collection In Bond Registrations : பத்திரப்பதிவுகள் நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி ரூபாய் வசூல்
-
Vaa Vaathiyaar Teaser : வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியீடு
-
Kanguva Review : கங்குவா படத்தின் திரை விமர்சனம்
-
IND Vs SA 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்