Omron Investment In TN : தமிழகத்தில் OMRON கார்ப்பரேஷன் ரூ.128 கோடி முதலீடு

ஜப்பானின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக முதலீடு - Omron Investment In TN :

OMRON கார்ப்பரேஷன் என்பது ஜப்பானின் கியோட்டோவில் உள்ள ஒரு மின்னணு நிறுவனமாகும். இது உலகின் மிகப்பெரிய மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது தொழில்துறை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர் மற்றும் மின்னணு பாகங்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனம் குறைந்த அதிர்வெண் வலி சிகிச்சை உபகரணங்கள் (Low-Frequency Pain Therapy Equipment) மின்னணு வெப்பமானிகள் மற்றும் உடல் அமைப்பு மானிட்டர்கள் (Body Composition Monitors) உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.

OMRON நிறுவனம் தற்போது சுமார் 120 நாடுகளுக்கு தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் சமூகத்தின் வளர்ச்சிக்கு OMRON நிறுவனம் ஆனது தொடர்ந்து பங்களித்து வருகிறது. தமிழ் மாநிலத்தில் ரூ.130 கோடி முதலீட்டைக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) OMRON நிறுவனம் (Omron Investment In TN) கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் முதல் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்கவுள்ளது.

பெருவொயல் கிராமத்தில் மஹிந்திராவின் ஆரிஜின்ஸில் OMRON-ன் முதல் உற்பத்தி தொழிற்சாலை :

கியோட்டோவை தளமாகக் கொண்ட மருத்துவ சாதனங்கள் துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான OMRON ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பெருவொயல் கிராமத்தில் மஹிந்திராவின் ஆரிஜின்ஸில் தனது முதல் உற்பத்தி தொழிற்சாலை (Omron Investment In TN) கட்டுமான பணியைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய உற்பத்தி தொழிற்சாலை மார்ச் 2025 முதல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OMRON நிறுவனம் ஆனது தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து தயாரிப்புகளையும் மற்றும் இரத்த அழுத்த மானிட்டர்களையும் தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கத் தொடங்கும். முழு மருத்துவ தொழில்நுட்ப சூழலை உருவாக்க, இப்பிரிவில் உள்ள மற்ற நிறுவனங்களை ஈர்க்கவும் மாநில அரசு எதிர்பார்க்கிறது. ஜப்பானிய நிறுவனமான சுமிடோமோ மிட்சுய் கன்ஸ்ட்ரக்ஷனின் இந்திய துணை நிறுவனமான SMCC கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியாவால் இந்த கட்டுமானப் பணி ஆனது மேற்கொள்ளப்படும். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழகம் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஓம்ரான் நிறுவனத்தின் முதலீடு மற்றும் மருத்துவத் துறைக்கான உற்பத்தி தொழிலை தொடங்குவதன் மூலம் தமிழ் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஓம்ரான் நிறுவனம் (Omron Investment In TN) முக்கிய பங்காற்ற இருக்கிறது, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை மீதான நம்பிக்கையை மட்டுமின்றி, வெற்றிகரமான அதன் மருத்துவ கட்டமைப்பின் மீதான நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply