கேரளாவில் West Nile Fever பரவுகிறது

தற்போது கேரளாவில் அச்சுறுத்தும் வகையில் West Nile Fever காய்ச்சலால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கேரளாவின் பொதுமக்களை பெரிதளவில்  பயமுறுத்தும் மற்றும் கலங்கவைக்கும் வார்த்தையாக West Nile Fever உள்ளது. இந்த West Nile Fever ஒரு புதிய நோய் அல்ல. முதல்முறையாக ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 1937 ஆம் ஆண்டில் கொசுக்களால் பரவும் இந்த West Nile Fever காய்ச்சல் கண்டறியப்பட்டது.

முதல்முறையாக இந்த காய்ச்சலால் West Nile மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாதிக்கப்பட்டதால் இந்த காய்ச்சலுக்கு West Nile Fever என்ற பெயர் ஏற்பட்டது. வட அமெரிக்காவில் 1999 ஆம் ஆண்டு இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பின், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் முறையாக கேரளாவில் 2011 ஆம் ஆண்டு ஆலப்புழாவில் இந்த West Nile Fever கண்டுபிடிக்கப்பட்டது.

West Nile Fever ஏற்படும் விதம் :

வெஸ்ட் நைல் வைரஸ் (WNV) என்பது மேற்கு நைல் காய்ச்சலை ஏற்படுத்தும் ஒற்றை-இழையான RNA வைரஸ் ஆகும். இது டெங்கு வைரஸ், மஞ்சள் காய்ச்சல் வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவற்றைக் கொண்ட Flavivirus இனத்தைச் சேர்ந்த (Flaviviridae குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு ஒற்றை-இழையான RNA வைரஸ் ஆகும். இது மூளை அழற்சியை ஏற்படுத்தும் வைரஸ்களுடன் தொடர்புடையது. இந்த வைரஸ் பெரும்பாலும் கொசுக்களால் பரவுகிறது (க்யூலெக்ஸ் இனங்கள்). பொதுவாக பறவைகளில் இந்த வைரஸ் காணப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் கொசுக்களால் பாதிக்கப்பட்ட பறவைகளை மனிதர்கள் உண்ணும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பறவைகளை கொசு கடிக்கும் போது இந்த வைரஸ் கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைந்து அங்கு அது பெருகி அந்த கொசு கடிக்கும் விலங்குகளுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் பரவுகிறது. இந்த West Nile Fever வகை காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதற்கான தடுப்பூசி ஆனது இதுவரை கண்டறியப்படவில்லை.

World Health Organization Report :

உலக சுகாதார அமைப்பு, “பொதுவாக இந்த West Nile Fever வகை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்ற 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. மிகக்குறைவாக 20% பேருக்கு மட்டுமே காய்ச்சல், தலைவலி, தசை பலவீனம், மூளையழட்சி மற்றும் கழுத்து விறைப்பு ஆகிய அறிகுறிகள் ஆனது தென்படுகின்றது” என தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply