Rathnam Movie Vishal : ரத்னம் பட விவகாரத்தில் கொந்தளித்த விஷால்

ரத்னம் படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக நடிகர் விஷால் (Rathnam Movie Vishal) கூறிய நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ஹரியுடன் விஷால் இணையும் 3வது படம் ‘ரத்னம்’. பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரத்னம் திரைப்படம் இன்று ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக இயக்குனர் ஹரியும், நடிகர் விஷாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரடி ப்ரோமோஷனில் ஈடுபட்டனர்.

Rathnam Movie Vishal - விஷால் புகார் :

இந்நிலையில் நடிகர் விஷால் நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ரத்னம் படத்திற்கு திருச்சி மற்றும் தஞ்சாவூரில் முன்பதிவு இன்னும் தொடங்காமல் வைத்திருக்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகத்தை 6 மணி நேரமாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறேன். அவர்கள் என்னை சுற்றில் விடுகிறார்கள். ரத்னம் படம் வெளியாக இருக்கும் கடைசி நேரத்தில் எனக்கு தொடர்பில்லாத ஒருவர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தில் பணம் வசூலித்து தருமாறு கடிதம் கொடுத்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன’ என ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஷால் வெளியிட்டுள்ள X இணையதளப் பதிவில், கடைசியாக கட்டபஞ்சாயத்து வளர்ந்து எந்த பயமும் வருத்தமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் என்னவெனில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவும் அதன் தயாரிப்பாளர்களும் ரோலர்கோஸ்டர் சவாரியில் உள்ளனர் என்பதுதான். திருச்சி, தஞ்சாவூர் நகரங்களின் தியேட்டர் சங்கத்தின் உறுப்பினர்கள் இப்படிப்பட்ட கட்டப்பஞ்சாயத்தை வெளிக்காட்டி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள், என்னைப் போன்ற போராளிகளுக்கு இது ஒரு பின்னடைவு, கொஞ்சம் தாமதமானாலும் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன். ஏனென்றால் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வாழ்வாதாரம் உள்ளதால் பொழுதுபோக்கிற்காக திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன்.

இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தயாரிப்பாளர் சங்கம் எந்த நோக்கத்திற்காக அல்லது காரணத்திற்காக உள்ளது என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். கண்டிப்பாக இது உங்கள் அனைவருக்கும் அவமானம். இதை நடிகர் சங்க பொதுச் செயலாளராகவோ, நடிகராகவோ, தயாரிப்பாளராகவோ சொல்லவில்லை. “ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக நான் ஒரு வியாழன் மாலை நடந்த நிகழ்வுகளை பார்வையிட்டதன் மூலம் அவரது படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கிறேன்” என்று அவர் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply