Sardaar 2 Shooting : ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 ஷூட்டிங்

நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது கார்த்திக் 26, கார்த்திக் 27 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பில் (Sardaar 2 Shooting) கார்த்தி இணையவுள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் நடித்து வரும் கார்த்தி, அண்ணன் சூர்யாவின் தயாரிப்பிலும் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி, கதாப்பாத்திரங்களில் இருந்து தான் தேர்ந்தெடுத்த இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 கார்த்திக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. மல்டி ஸ்டார் படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் கார்த்தி அதிக ஸ்கோர் செய்திருந்தார். அதையடுத்து ராஜுமுருகன் இயக்கிய ஜப்பான் படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. கார்த்தி தற்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு வா வாத்தியாரே, மெய்யழகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், கார்த்தி அடுத்ததாக சர்தார் 2 (Sardaar 2 Shooting) படத்தில் இணையவுள்ளார்.

Sardaar 2 Shooting :

இது குறித்த அறிவிப்பு முன்னதாக அறிவிக்கப்பட்ட சூழலில், இந்தப் படத்தின் பூஜை அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இந்தப் படமும் முதல் பாகத்தைப் போலவே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எஸ்.மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் சர்தார் 2022 இல் வெளியானது. இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த இரட்டை வேடங்களில் நன்றாக ஸ்கோர் செய்தார். இப்படத்தின் திரைக்கதை மிகவும் பிரபலமாக இருந்ததால் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை பிப்ரவரி மாதமே மித்ரன் முடித்துவிட்டதாகவும், இதற்கான எளிய பூஜை ஏற்கனவே நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் (Sardaar 2 Shooting) மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply