Rathnam Movie Review : ரத்னம் திரைப்படத்தின் திரை விமர்சனம்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் எப்படி இருக்கு (Rathnam Movie Review) என்பதை தற்போது காணலாம். நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்துள்ள ரத்னம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் சில தடைகளை மீறி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், அலங்கர் பாண்டியன் மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் விமர்சனம் (Rathnam Movie Review) பற்றி காணலாம்.

படத்தின் மையக்கருத்து :

ஆதரவற்ற சிறுவனான விஷால், சிறுவயதில் தனக்கு உறுதுணையாக இருந்த சமுத்திரக்கனியைக் கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்கிறார். அதன் பிறகு அடியாளாக வளர்ந்து வலம் வரும் அவர் நாயகி பிரியாவை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்ற அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் படத்தின் மீதி கதையாக உள்ளது.

Rathnam Movie Review :

நடிகர் விஷால் இது நம்ம ஏரியான்னு சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற படங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே ஆக்ஷனில் அடித்து விளையாடி இருக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கருக்கு டபுள் ஆக்ஷன். கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார். சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். மெயின் வில்லனாக தெலுங்கு நடிகர் முரளி சர்மா மாஸ் காட்டுகிறார். ஹரியின் இயக்கத்தில் விஷால் சண்டைக் காட்சிகளில் ஜொலித்த அளவுக்கு, அவரது நடிப்பு நம்மை கவனிக்க வைக்கிறது.

பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இப்படியொரு உறவா? என்கின்ற ட்விஸ்ட் ரசிகர்களை திகைக்க வைக்கிறது. பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் என பல சண்டை இயக்குனர்கள் தரமான சேஸிங் காட்சிகளை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்கள். இந்தப் படத்திலும் யோகி பாபு நகைச்சுவை செய்து ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்துகிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை ஓகே. ஆனால் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. ஹரி மற்றும் விஷாலின் கமர்ஷியல் படங்களின் ரசிகராக இருந்தால் இப்படத்தை (Rathnam Movie Review) ஒருமுறை பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply