Balaji Praises Dhoni : உலகின் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேன் தோனி

சென்னை :

தோனி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான லக்ஷ்மிபதி பாலாஜி அதிரடியாக (Balaji Praises Dhoni) கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலகின் மிக சக்திவாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன் என்று தோனியை கூறுகிறார். 2024 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் டோனி அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்து வருகிறார். 42 வயதான தோனி, கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பாதிப்பிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை. இருப்பினும், அவர் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

தோனி :

இது அவரது கடைசி ஐபிஎல் தொடர் என்று கூறப்பட்ட நிலையில், தோனி ஃபினிஷராக மட்டுமே விளையாடி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஓரிரு ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார். அதனால் தான் அடிக்கும் சில பந்துகளில் அதிக பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி 6 போட்டிகளில் 260 ஸ்டிரைக் ரேட்டில் 91 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் குறைந்தது 30 பந்துகளில் அதிக அளவு ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர் தோனி. தோனியின் பேட்டிங் ஆட்டத்தை லக்ஷ்மிபதி பாலாஜி (Balaji Praises Dhoni) பாராட்டியுள்ளார்.

Balaji Praises Dhoni :

ஐபிஎல் தொடருக்கான இந்த ஆண்டு நெட் பிராக்டீஸ் வரை தோனி பேட்டை தொடவே இல்லை என்று பாலாஜி கூறினார். தோனி வேறு எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கு தன்னை சரியாக தயார்படுத்திக் கொண்டார். நீண்ட காலமாக நெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஷாட்டை அதிரடியாக அடிப்பதே அவரது முக்கிய வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தோனி மிகவும் சக்திவாய்ந்த பேட்ஸ்மேனாக மாறிவிட்டார். வேறு எந்த பேட்ஸ்மேனும் அவரை நெருங்க முடியாது என்றார்.

Latest Slideshows

Leave a Reply