MI Loss Against DC : போராடி தோல்வி அடைந்த மும்பை

டெல்லி :

டெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த உடனே கேப்டன் பாண்டியா டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

ஜாக் பிரேசர் :

ஒரு கட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் 240 ரன்கள் எடுப்பதே அதிசயமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு அணியும் 250 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர் ஜாக் பிரேசர் பேய் போல் விளையாடினார். 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இதில் பல இமாலய சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரல் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார், மேற்கிந்திய வீரர் ஹோப் 5 இமாலய சிக்ஸர்களை அடித்தார் மற்றும் 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். ரிஷப் பந்த் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 48 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

MI Loss Against DC :

அதிரடியாக விளையாட முயன்ற  கிஷான் 14 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இம்பேக்ட் வீரர் சூரிய குமார் யாதவ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கலீல் அகமதுவின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். நேஹால் வதேரா 4 ரன்களில் வெளியேறிய பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இணைந்து மும்பையை சரிவில் இருந்து மீட்டனர். ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டிங்கில் பிரகாசித்தார். அவர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். ஹர்திக் பாண்டியா பெரிய ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு முக்கியமான கட்டத்தில் அவுட் ஆனார். அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் டீம் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரும் கடைசி வரை நிலைக்க முடியவில்லை.

டிம் டேவிட் 17 பந்துகளில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார், திலக் வர்மா 32 பந்துகளில் 63 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி (MI Loss Against DC) உறுதியானது. கடைசியாக இறுதி ஓவரில் 25 ரன்கள் எடுத்தால் மும்பை வெற்றி என்ற நிலையில் மும்பை அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது தோல்வியை (MI Loss Against DC) சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply