CSK And MI : சென்னை மற்றும் மும்பை அணிகள் தடுமாற காரணங்கள் என்ன?

டெல்லி :

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் (CSK And MI) பலம் வாய்ந்த அணிகள். இரு அணிகளும் தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளன. அபார பேட்டிங் தவிர, புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர்கள் மற்றும் மாஸ்டர் கேப்டன்கள் இரு அணிகளுக்கும் பலமாக இருந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் மாற்றம் நிலையானது என்ற வரிக்கு ஏற்ப மாறி வருகிறது. இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, இதற்கு முன் ஐபிஎல் தொடர்களில் 170 ரன்கள் இலக்காக வைத்தாலே அதை எடுக்க முடியாமல் சேசிங் செய்யும் அணியினர் திணறுவார்கள். ஆனால் தற்போது 15 ஓவர்களில் எல்லாம் 170 ரன்களை அடித்து விடுகின்றனர். இந்த மாற்றத்தை எதிர்பார்த்த சன்ரைசர்ஸ் அணியும், டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் அதற்கு ஏற்றவாறு வீரர்களையும், யுக்திகளையும் மாற்றி வருகின்றன. தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமநிலையின்மை உள்ளது. டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக மாறியுள்ளது.

CSK And MI :

உதாரணமாக டி20 கிரிக்கெட்டில் 11 முதல் 15வது ஓவர் வரை ரன் விகிதம் குறைகிறது. ஆனால் இப்போது பல அணிகள் இம்பாக்ட் பிளேயர் போன்ற விதிகளால் தங்கள் ரன் விகிதத்தை சீராக வைத்திருக்கின்றன. இதனால், 180-190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை மாறி, 260 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறாது என்ற நிலைக்கு மாறியுள்ளது. டி20 கிரிக்கெட் தற்போது இந்த நிலையை நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK And MI) இதைக் கணிக்கத் தவறிவிட்டன.

இரு அணிகளும் இன்னும் பழைய பாணியையே பின்பற்றி வருகின்றன. ஆனால் மற்ற அணிகள் அனைத்தும் சிறப்பாக விளையாடி கொடி கட்டி பறக்கின்றன. ஆனால் சிஎஸ்கே, மும்பை அணிகள் புதிய பாணிக்கு மாறவில்லை. இதனால், சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் குறையும் என்றும், இனி சன்ரைசர்ஸ், டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் கொடி கட்டிப் பறக்கும் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையும் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெரிய இலக்கை அடித்தது ஆனால் சிஎஸ்கே இந்த முறை 210-220 ரன்களை தாண்டவில்லை.

Latest Slideshows

Leave a Reply