Brand Ambassador Of T20 World Cup : டி20 உலக கோப்பையில் சிறப்பு தூதராக அறிவிக்கப்பட்ட யுவராஜ் சிங்

நியூயார்க் :

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான தூதராக யுவராஜ் சிங் (Brand Ambassador Of T20 World Cup) அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக உசைன் போல்ட், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தூதுவர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தூதராக உலகக் கோப்பை ஹீரோ யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை தொடர் இன்னும் 36 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த முறை டி20 உலக கோப்பை தொடர்கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதனை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது தூதராக மேற்கிந்திய தீவுகள் குழு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை சேர்ந்த பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட்டை அறிவித்துள்ளது. அவர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானவர் என்பதால் அவர் அறிவிக்கப்பட்டார்.

Brand Ambassador Of T20 World Cup - யுவராஜ் சிங் :

அடுத்ததாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் பிறகு இந்திய உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் சிறப்பு தூதராக (Brand Ambassador Of T20 World Cup) அறிவிக்கப்பட்டார். முதன்முறையாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்தார் யுவராஜ் சிங். டி20 உலகக் கோப்பையின் முதல் தொடரிலேயே பெரிய வெற்றிக்கு யுவராஜ் சிங் முக்கிய காரணம். அந்த வகையில் டி20 உலகக் கோப்பை அமெரிக்காவை நோக்கி நகரும் நிலையில் அதன் தூதராக மாறியுள்ளார்.

இந்த சிறப்பை குறித்து கூறிய யுவராஜ் சிங், உலக கோப்பையில் எனக்கு நிறைய சிறப்பான நினைவுகள் இருக்கின்றன. அதில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். மேலும் யுவராஜ் சிங் கூறுகையில், “நியூயார்க்கில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இந்த ஆண்டின் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். இந்தத் தொடரில் பங்கேற்றதையும், உலகின் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதையும் பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

ஹைதராபாத் :

டி20 உலக கோப்பை தொடரில் விளையாட அபிஷேக் சர்மா தயாராக இல்லை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் ஆட்டம் மும்பை, சிஎஸ்கே, கொல்கத்தா போன்ற சாம்பியன் அணிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசையானது, வழக்கமாக 250 ரன்கள் எடுக்கும் அதிரடி பேட்ஸ்மேன்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அபிஷேக் சர்மா :

குறிப்பாக அபிஷேக் சர்மா சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை வித்தியாசமான லெவலில் தாக்கி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 26 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் உட்பட 288 ரன்கள் குவித்துள்ளார். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் டி20 உலகக் கோப்பைக்கு அபிஷேக் சர்மாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இது குறித்து பேசிய அபிஷேக் சர்மாவின் குரு யுவராஜ் சிங், இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா விளையாட தயாராகி வருகிறார். ஆனால் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட அவர் இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை டி20 உலக கோப்பை தொடருக்கு அனுபவம் வாய்ந்த அணியை இந்தியா தேர்வு செய்ய வேண்டும். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவுக்காக விளையாட அபிஷேக் சர்மா தயாராக வேண்டும்.

அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது வாழ்க்கையின் அடுத்த 6 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. முந்தைய சீசன்களுடன் ஒப்பிடுகையில் அவர் நிச்சயமாக முன்னேறியுள்ளார். குறிப்பாக, ஸ்ட்ரைக் ரேட் ஆச்சரியமாக இருந்தாலும், பெரிய ஸ்கோர் இன்னும் அடிக்கப்படவில்லை. இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமானால், பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். சதம் அடித்தால்தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும். அவர் பெரிய ஷாட்களை விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நீங்கள் ஒரு ரன் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும், அதற்காக அபிஷேக் சர்மா செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். டிராவிஸ் ஹெட் போன்ற அனுபவமிக்க வீரராக விளையாடுவதன் மூலம் அபிஷேக் சர்மா நிச்சயமாக கற்றுக்கொள்ள முடியும். டிராவிஸ் ஹெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார். முக்கிய போட்டிகளில் சாதிக்கக்கூடிய பேட்ஸ்மேன். அதனால் எப்படி பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று அபிஷேக் சர்மா கூறினார்.

Latest Slideshows

Leave a Reply