Rare Species Of Fish Cattail : அரியவகை மீன் கூறல் கத்தாழை ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம் போனது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் கூறல் கத்தாழை 1,87,700 ரூபாய்க்கு ஏலம் (Rare Species Of Fish Cattail) போனது :

இந்த வகை அரியவகை கூறல் கத்தாழை மீன்கள் ஆழ்கடலில் 4 அல்லது 6 நாட்கள் தங்கி மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தால் மட்டுமே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். ஆழ்கடலில் ஆபத்தான நிலையில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கே  இதுபோன்ற அரியவகை கூறல் கத்தாழை மீன்கள் என்றாவது ஒரு முறை கிடைக்கும். 25 கிலோ எடை கொண்ட அரியவகை கூறல் கத்தாழை மீன், 1,87,700 ரூபாய்க்கு ஏலம் போனது (Rare Species Of Fish Cattail) பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.1,87,700 ரூபாய்க்கு ஏலம் - மகிழ்ச்சியில் மீனவர் ரவி :

அதிராம்பட்டினம் ஆனது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது. மீனவர் ரவி அதிராம்பட்டினத்தில் உள்ள கரையூர் தெருவைச் சேர்ந்தவர் ஆவார். மீனவர் ரவி சொந்தமாக நாட்டுப் படகு வைத்துள்ளார். அதில் அவர் வழக்கமாக கடலுக்கு சென்று மீன் பிடிப்பார். எப்போதும் போல மீனவர் ரவி நாட்டுப் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்துள்ளார். மீனவர் ரவியின் வலையில் சிக்கிய மீன்களில் நல்ல எடை கொண்ட பெரிய மீன் ஒன்று இருந்தது. நாட்டுப் படகில் கடலிருந்து திரும்பிய மீனவர் ரவி அதிராம்பட்டினத்தின் பெரிய மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக பெரிய மீன் உட்பட அனைத்து மீன்களையும் எடுத்துச் சென்றார்.

அதிராம்பட்டினத்தின் பெரிய மார்க்கெட்டில் மீனை எடைபோட்டதில் அந்த ஒரு மீன் மட்டும் 25 கிலோ இருந்தது. அது அரிதாக மாட்டக்கூடிய ரகமான கூரைக் கத்தாழை (Rare Species Of Fish Cattail) என்ற வகையைச் சேர்ந்த மீன் என்பதும் தெரியவந்தது. அவரது மீன் ஏலம் விடப்பட்டது. அங்கு இருந்த வியாபாரிகள் அந்த மீனை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுக்கத் துவங்கினர். 1,000 ரூபாயில் தொடங்கிய ஏலம் ஆனது மள மளவென உயர்ந்தது. அரிய வகை மீன் என்பதால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் 25 கிலோ கொண்ட அந்த கூறல் கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம் போனது. ஒரே மீன் மட்டுமே ரூ.1.87 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூரைக் கத்தாழை மீனின் சிறப்புகள் :

  • இது ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தது.
  • இந்த மீனில் மருத்துவக் குணங்கள் உள்ளன. இந்த வகை மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்குமாம்.
  • இந்த நெட்டி, ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒரு வகை வேதிப்பொருட்களை கொண்டிருக்குமாம். குறைந்தது நெட்டி 100 கிராம் வரை ஒரு மீனில் கிடைக்கும்.
  • அந்த நெட்டி மருத்துவ குணம் கொண்டதாகவும் ஆண்மை குறைவு உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாகவும் மற்றும் விலை உயர்ந்த ஒயின், ஜெல்லி மிட்டாய், மருந்துகள் தயாரிக்க மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.
  • இதனால் மீனவர்கள் தங்கத்தை போல் இதை சேமித்து கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என சொல்லப்படுகிறது.
  • இதனால்தான் இவ்வளவு விலை கொடுத்து வியாபாரிகள் ஏலம் (Rare Species Of Fish Cattail) எடுத்துள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
  • வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு இந்த வகை மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply