Miss Universe At 60 Yrs : வரலாற்றில் முதல்முறையாக 60 வயதில் Miss Universe வெற்றி

வரலாற்றில் முதல்முறையாக Miss Universe At 60 Yrs - அர்ஜெண்டினாவைச் சேர்ந்த Alejandra Marisa Rodriguez :

கடந்த ஏப்ரல் 24 அன்று அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் அழகிப் போட்டி நடைபெற்றது. 60 வயதான பெண்மணி Alejandra Marisa Rodriguez அர்ஜெண்டினாவில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் (Miss Universe At 60 Yrs) வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண் இவர்தான். இந்த வெற்றி மூலம் வரலாற்றிலும் Alejandra Marisa Rodriguez இடம் பிடித்து உள்ளார். கடந்தாண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற வயது வரம்பு விதிமுறை ஆனது நீக்கப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட எந்தப்பெண்ணும் இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதேபோல 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024-ல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற இந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 18 முதல் 73 வயது வரை உள்ள 34 பெண்கள்  போட்டியிட்டுள்ளனர். 60 வயதான Alejandra Marisa Rodriguez இந்த 33 பெண்களுடன் போட்டியிட்டார். இதில், அந்த மாகாணத்திற்கு மிஸ் யுனிவர்ஸ் ஆக Alejandra Marisa Rodriguez வென்றதாக அறிவிக்கப்பட்டார். போட்டியின் நடுவர்கள், “அவரது வெற்றிக்கு நேர்த்தியும், நளினமும், புன்னகையும்தான் காரணம்” என கூறியுள்ளனர். இந்த வெற்றி ஆனது Alejandra Marisa Rodriguez-க்கான கொண்டாட்டத்தை மட்டுமின்றி, உலகத்தில் அழகிப் போட்டிகள் ஆனது அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்பதை உலகிற்கே அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் வெற்றிபெற்ற அலெஜாண்ட்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Alejandra Marisa Rodriguez - ஓர் குறிப்பு :

Alejandra Marisa Rodriguez அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாண லா பிளாட்டாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு வழக்கறிஞர். மருத்துவமனை ஒன்றில் தற்போது ஒரு சட்ட ஆலோசகராக உள்ளார். சில காலம் இவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றி உள்ளார். வெற்றி குறித்து Alejandra Marisa Rodriguez, “இப்படியொரு வியத்தகு மாற்றம் ஆனது அழகுப் போட்டிகளில் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியின் நடுவர்கள் பெண்களின் உடல் அழகை மட்டுமின்றி, பெண்களின் மற்ற மதிப்புகளை வைத்தும் பெண்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. அர்ஜென்டினாவில் வரும் மே மாதம் தேசியளவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிப் போட்டியில், பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை அலெஜாண்ட்ரா நான் பிரதிநிதிப்படுத்த  போகிறேன்” என்றார்.

அந்த பிரபஞ்ச அழகிப் போட்டி தொடருக்கு Alejandra Marisa Rodriguez தயாராகி வருவது குறித்த வீடியோ ஒன்று அவரின் சமூக வலைதளங்களில் பதிவாகி உள்ளது. தேசியளவில்  அந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் Alejandra Marisa Rodriguez  வெற்றி பெறும்பட்சத்தில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி மெக்ஸிகோவில் நடைபெறும் உலகளவிலான பிரபஞ்ச அழகி போட்டியி லும் பங்கு பெறுவார் என கூறப்படுகிறது. இவரது வெற்றி ஆனது அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே  உலகத்திற்கு  காட்டுகிறது.

Latest Slideshows

Leave a Reply