Guinness Record Of Madurai Youth : மதுரை இளைஞர் 30 வினாடிகளில் புதிய கின்னஸ் சாதனை

பாகிஸ்தான் நபரின் சாதனையை முறியடித்த மதுரை இளைஞர் கின்னஸ் சாதனை (Guinness Record Of Madurai Youth) :

30 வினாடிகளில் 29 நெருப்பு கான்கீரிட் கற்களை கைகளால் உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் இளைஞர் செய்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்து மதுரை இளைஞர் புதிய சாதனை (Guinness Record Of Madurai Youth) படைத்துள்ளார். மென்பொருள் பொறியாளர் விஜய் நாராயணன் மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 32 கின்னஸ் சாதனைகளை இதுவரை நிகழ்த்தியுள்ள இவர் தற்போது தனது 33வது கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் என்பவர் 30 வினாடிகளில் 25 கான்கிரீட் கற்களை உடைத்த உலக சாதனையை முறியடித்து 30 வினாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஆனது இவரது இந்த சாதனையை (Guinness Record Of Madurai Youth) அங்கீகரித்து பயிற்சியாளர் நாராயணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.

மென்பொருள் பொறியாளர் விஜய் நாராயணனின் பல்வேறு கின்னஸ் சாதனைகள் :

விஜய் நாராயணன் டேக்வாண்டோ மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியுள்ளார். டேக்வாண்டாவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை இவர் நிகழ்த்தி வருகிறார்.

  • ஆணி படுக்கையில் படுத்தவாரு 80 கான்கிரீட் கற்களை மூன்று நிமிடத்தில் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  • மூன்று நிமிடத்தில் ஆணி படுக்கையில் படுத்தபடி உடலுக்கு மேற்புறம் ஆணி படுக்கையை வைத்துக் கொண்டு 80 கான்கிரீட் கற்களை உடைக்கும் கின்னஸ் சாதனையை நாராயணன் படைத்துள்ளார்.
  • ஒரு நிமிடத்தில் 154 கிக்குகள் படைத்த தம்பதி – இவரும் இவரது மனைவி ஸ்ருதியும் 1 நிமிடத்தில் தலா 154 கிக்குகள் தொட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்
  • ஒரு நிமிடத்தில் அதிக பஞ்ச்
  • 3 நிமிடத்தில் அதிக பஞ்ச்
  • ஒரு நிமிடத்தில் 38 கான்கிரீட் செங்கலை உடைப்பது
  • ஜம்பிங் பேக் ஹிக் முறையில் கான்கிரீட் செங்கலை உடைப்பது
  • கீழும் மேலுமாக ஆணி படுக்கையில் படுத்துக் கொண்டு மேலே ஒரு நிமிடத்தில் 32 கான்கிரீட் சுத்தியலை உடைப்பது,
  • ஒரு நிமிடத்தில் 4 கிலோவுக்கு மேலான 23 தர்பூசணி பழங்களை உடைத்தது
  • போன்ற பல பிரிவுகளில் கின்னஸ் சாதனைப் படைத்துதுள்ளார். டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளில் 29 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

டேக்குவாண்டோ - கொரிய தற்காப்பு கலை :

  • டேக்குவாண்டோ என்ற இந்த கொரிய தற்காப்பு கலை சமீப காலமாக கராத்தே விளையாட்டைப் போல பிரபலமாகி வருகிறது. கொரியன் அவர்களின் ராணுவத்துறையில் பயிற்சி அளிக்கப்பட்ட இந்தக் கலை, ஒலிம்பிக்கில் விளையாட்டுப் போட்டியாக சேர்க்கப்பட்ட பின், உலகில் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது.
  • இந்தியாவில் கடந்த 2000-லிருந்து இந்தக் கலை பலராலும் ஆர்வமாக கற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனாலும், இந்த தற்காப்பு கலை படித்தவர்கள் சொற்பமானவர்களே. இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply