Registration Department Revenue In February 2024 : பத்திர பதிவுத்துறை வரலாற்றில் புதிய சாதனை

Registration Department Revenue In February 2024 :

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும்  மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) ஆகியோருக்கான 2022-ம் ஆண்டுக்கான ஜனவரி மாத பணி சீராய்வு கூட்டம் கடந்த பிப்.25-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் பா.ஜோதிநிர்மலாசாமி மற்றும் பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் மற்றும் கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் உதவிப்பதிவுத் துறை தலைவர்கள், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Registration Department Revenue In February 2024 : இந்த கூட்டத்தில் பத்திர பதிவுத்துறை ரூ.16,653 கோடி வருவாயை கடந்துள்ளதற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்  2023-24-ம் நிதியாண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாயை பத்திர பதிவுத்துறைக்கு (Registration Department Revenue In February 2024) கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட ரூ.218 கோடி அதிகம் என பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார். மேலும் இது கடந்த 2023 நிதியாண்டு பிப்ரவரி மாதத்தில் அடைந்த வருவாய் ரூ.1,593.95 கோடியை விட இது ரூ.218.74 கோடி அதிகமாகும். இந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் முடிய மொத்தம் ரூ.16,653.32 கோடி வருவாய்யானது பதிவுத்துறையால் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் பிப்ரவரி வரை அடைந்த வருவாய் ரூ.15,481.72 கோடியை விட ரூ.1171.60 கோடி (Registration Department Revenue In February 2024) அதாவது (7.57சதவீதம்) அதிகமாகும்.

ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் :

ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் உடன் புகைப்படத்தை கிரைய ஆவணத்துடன் இணைத்து ஆவணப்பதிவு மேற்கொள்ளும் இந்த நடைமுறையால் கட்டிட மதிப்பிற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் கட்டிடங்களை மறைத்து ஆவணம் பதிவு செய்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்களின் மதிப்புக்கான உரிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் அரசுக்கு செலுத்தப்படுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலீடுகளின் வளர்ச்சி தனிநபர் வருவாய் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக பதிவுத்துறையில் இதை விடவும் கூடுதலான வருவாய் இந்த நிதியாண்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக மனைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply