Rising House Prices In Chennai And Coimbatore : சென்னை மற்றும் கோவையில் நிலத்தின் மதிப்பு உயர்வு

Rising House Prices In Chennai And Coimbatore :

நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நிலத்தின் மதிப்பானது உயர்ந்துவிட்டதாக ரியல் எஸ்டேட் துறை தரப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதாவது மெட்ரோ ரயில் செல்லும் பாதையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இடங்களின் சொத்து மதிப்பு திடீரென 30% சதவீதம் முதல் 40% சதவீதம் வரை மற்ற பகுதிகளை விட மெட்ரோ ஸ்டேஷன் பகுதிகளில் 50% சதவீதம் வரை சொத்து மதிப்பு (Rising House Prices In Chennai And Coimbatore) உயர்ந்துள்ளது. உதாரணமாக 2013-ம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் ஒரு சதுரடியின் விலை ரூ.11,600 என்றிருந்தது தற்போது ரூ.13,200 உள்ளது.

வடபழனியில் ஒரு சதுரடியின் விலை ரூ.7,900 என்றிருந்தது இப்போது ரூ.10 ஆயிரம் என்ற விலையில் உள்ளது. அதேபோல் கோயம்பேட்டில் ஒரு சதுரடியின் விலை ரூ.7000 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாய்க்கும் மற்றும் சைதாப்பேட்டையில் ஒரு சதுரடியின் விலை ரூ.9,500-லிருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்ததுள்ளது. சராசரியாக இடத்தின் மதிப்பு 50% சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய வீட்டுவசதி வங்கி ரியல் எஸ்டேட் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அண்ணாசாலை பகுதியில் அதற்கு மேல் விலை கூடிவருகிறது. ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையிலும் 30% சதவீதம் அளவுக்கு நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. வடசென்னை மற்றும் தென் சென்னையின் பல்வேறு இடங்கள் பூந்தமல்லி, போரூர், மாதவரம், சோழிங்கநல்லூர் போன்ற இடங்களில் சொத்து மதிப்பு திடீரென 40% சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

வடசென்னை :

சென்னையில் வளர்ச்சி பெறாத இடமாக கருதப்பட்ட வடசென்னையின் பகுதிகள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து வருவதாகவும் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை வந்த காரணத்தினால் தான் இந்த இடத்தின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னை மற்றும் கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள வீடுகளின் விலைப்புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தேசிய வீட்டுவசதி வங்கியின் ரியல் எஸ்டேட் புள்ளி விவர அறிக்கையில் (Rising House Prices In Chennai And Coimbatore) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய வீட்டுவசதி வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் இது வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக செயல்படுகிறது.

வீட்டு வசதி வாரியம் :

இந்தியாவில் மொத்தம் 50 நகரங்களில் உள்ள வீடுகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான அனைத்து புள்ளி விவரங்களையும் தேசிய வீட்டு வசதி வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும் வீடுகளின் விற்பனை விலைகள் காலாண்டுக்கு அடிப்படையிலும் ஒப்பிடப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. தேசிய வீட்டுவசதி வங்கியின் அறிக்கையில் ‘கடந்த 2022 டிசம்பர் நிலவரத்தைவிட 2023 டிசம்பரில் விலை புள்ளிகள் 4.7% சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டு மாற்றம் அடிப்படையில் கணக்கிடும்போது சென்னையில் வீடுகளின் விலை புள்ளிகள் 3.8% சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

கோவையில் வீடுகள் விலை சரிவு :

கோவையில் ஆண்டு மாற்றம் அடிப்படையில் வீடுகளின் விலை புள்ளிகள் 5.1% சதவீதம் வரை சரிந்துள்ளன. ஆனால் காலாண்டு மாற்றம் அடிப்படையில் பார்க்கும்போது சென்னையில் 2022 டிசம்பரில் 118 ஆக இருந்த வீடுகளின் விலை புள்ளிகள் 2023 ஆண்டு டிசம்பரில் 123 ஆக உயர்ந்துள்ளன. கோவையில் 2022 டிசம்பர் நிலவரப்படி 135 ஆக இருந்த வீடுகளின் விலை புள்ளிகள் 2023 டிசம்பரில் 128 ஆக சரிந்துள்ளது. ஆனால் காலாண்டு ஒப்பீடு அடிப்படையில் 2023 செப்டம்பர் மாதத்தில் 127 ஆக இருந்த விலை புள்ளிகள் டிசம்பரில் 129 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் சராசரி விலை 2022 டிசம்பர் மாத நிலவரப்படி ஒரு சதுர அடியின் விலை 11,301 ரூபாயாக இருந்தது. ஆனால் 2023 டிசம்பர் இறுதியில் ஒரு சதுர அடியின் விலை 11,650 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் கோவையில் 2022 டிசம்பர் நிலவரப்படி ஒரு சதுர அடி 7,262 ரூபாயாக இருந்த விலை 2023 டிசம்பர் இறுதியில் ஒரு சதுர அடியின் விலை 8,343 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தேசிய வீட்டுவசதி வங்கியின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply