Reliance Entry In Electronics Business : ரிலையன்ஸ் மின்சாதன பொருட்கள் விற்கும் துறையில் நுழைய உள்ளது

Reliance Entry In Electronics Business :

ரிலையன்ஸின் Wyzr என்ற நிறுவனம் ஆனது இந்தியாவில் அதிக போட்டி நிறைந்த மின்சாதன பொருட்கள் விற்கும் துறையில் (Reliance Entry In Electronics Business) நுழைந்துள்ளது. இந்த மின்சாதன பொருட்கள் விற்கும் துறை ஆனது ஆண்டுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் நிலவும் இடமாகும். தற்போது வரை இந்த மின்சாதன பொருட்கள் விற்கும் துறையில் Samsung, LG, Whirlpool, Sony மற்றும் Hayer ஆகிய பல நிறுவனங்கள் வலுவாக உள்ளன.

ரிலையன்ஸ் குழுமத்தின் நோக்கம் :

ரிலையன்ஸ் குழுமத்தின் நோக்கம் உலகத்தரத்துக்கு நல்ல பொருட்களை குறைந்த விலையில் தர வேண்டும் என்பதாகும். கடைகளுக்கான பெருலாபத்தை பெருவதை விட பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான வடிவமைப்பு பொருட்களை தரலாம் என்பதும் மற்றும் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்பதும் அம்பானியின் நோக்கமாக இருக்கிறது. இஷா அம்பானி, “நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் பொருட்களை விற்று அதில் 5G சேவையை இணைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே வலுவாக உள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் பிரிவின் மூலமாக 1.5 லட்சம் மின்னணு சில்லறை விற்பனையாளர்களை இணைத்துள்ளதால் அது தங்கள் பொருட்களை விற்க எளிதாக இருக்கும் என்று அம்பானி குடும்பத்தினர் கருதியுள்ளனர்.

ரிலையன்ஸின் Wyzr நிறுவனம் :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் மகள் Wyzr என்ற நிறுவனத்தை நிர்வகிக்க இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் ஆனது ஏற்கனவே மிர்க் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிக்சன் டெக்னாலஜிஸ் போன்ற உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்த (Reliance Entry In Electronics Business) மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

நியாயமான சந்தைப் பங்கைப் பெற்றவுடன் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் Wyzr பிராண்ட் நிறுவன உற்பத்திப் பிரிவை அமைக்க திட்டமிட்டுள்ளது. Wyzr என்ற ரிலையன்ஸின் பிராண்ட் மூலம் அனைத்து மின்சாதன பொருட்கள் தயாரிப்புகளும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளது. தற்போது AC மட்டுமே Wyzr நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த Wyzr நிறுவனத்தில் விரைவில் TV, Fridge, LED லைட் பல்புகள் மற்றும் Washing Machine போன்றவை உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply