TN Leading Exporter Of Electronics : ஆப்பிளின் உந்துதலால் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்

TN Leading Exporter Of Electronics :

இந்த நிதியாண்டில் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் ஆனது எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து (TN Leading Exporter Of Electronics) மாபெரும் சாதனை படைத்துள்ளது.

மின்னணு ஏற்றுமதி விவரங்கள் :

  • தமிழகம் ரூ.44 ஆயிரத்து 44 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது.
  • உத்தர பிரதேசம் ரூ.40,216 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது.
  • கர்நாடகா ரூ.37,082 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது.
  • மகாராஷ்டிரா ரூ.22,004 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது.
  • குஜராத் ரூ.19,139 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது.
  • டெல்லி ரூ.9,102 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

தமிழகம் எலக்ட்ரானிக்ஸில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 33 சதவீதமாக உள்ளது. தமிழக மாநிலம் சில மாதங்களுக்கு முன்பு நிர்ணயித்த $9 பில்லியன் இலக்கைத் தாண்டி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆப்பிளின் ஆக்கிரோஷமான உந்துதல் ஆகும். குறிப்பாக ஆப்பிலால் பின்பற்றப்பட்ட ‘சீனா பிளஸ் ஒன்’ உத்தியின் விளைவாக, அதன் ஒப்பந்ததாரர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சால்காம்ப் போன்ற சப்ளையர்களுடன் இணைந்து, கடந்த 2023 ஆண்டு நாட்டின் மின்னணு மையமாக தமிழகம் உயர பங்களித்தது.

தமிழ்நாடு இந்த 2023-24 நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலர் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் (TN Leading Exporter Of Electronics) சாதனை படைத்துள்ளது இந்த ஏற்றுமதி சாதனை ஆனது Foxconn மொபைல் பாகங்கள் திட்டங்கள், Salcomp விரிவாக்கம், Flex விரிவாக்கம், Tata Electronics மற்றும் Pegatron விரிவாக்கம் ஆகியவற்றுடன் அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கலாம். ஆப்பிள் தனது கைபேசிகளில் 2025 இல் 25 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய பரிசீலித்து வருகிறது. ஃபாக்ஸ்கான், உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக அதன் இந்திய யூனிட்டில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்து உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவு :

இந்த சாதனை (TN Leading Exporter Of Electronics) தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், ‘‘இந்தியாவிலேயே தமிழகம் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் என்ற இந்த சாதனை ஆனது திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கான சிறிய எடுத்துக்காட்டுதான். திராவிட மாடல் அரசானது தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழகத்தை மேம்படுத்த மற்றும் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகத்தை உயர்த்த உழைக்கும், தொடர்ந்து இதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, அவற்றில் சிறந்து விளங்கிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply