Petrochemical Factory In Thoothukudi : தமிழக அரசு தீவிர நடவடிக்கை

குஜராத் மாநிலத்திற்குப் போட்டியாகத் தமிழ்நாட்டில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை (Petrochemical Factory In Thoothukudi) :

பெட்ரோ கெமிக்கல் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்குப் போட்டியாகத் தூத்துக்குடியில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையை (Petrochemical Factory In Thoothukudi) அமைக்கும் தீவிர முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை :

  • தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை (Petrochemical Factory In Thoothukudi) ஆனது குஜராத்தில் இருக்கும் ஹசிரா மற்றும் ஜாம்நகரில் இருக்கும் தொழிற்சாலைக்கு இணையாக இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்த பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையின் இறுதிக்கட்ட பணியில் தமிழக அரசு ஆனது ஈடுபட்டுள்ளது.

  • இது ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் குஜராத் மாநிலத்திற்குப் போட்டியாகத் தமிழ்நாடு எடுத்துள்ள ஒரு முக்கிய முயற்சி ஆகும். பொருளாதாரத்தில் பின்னடைவாக உள்ள தமிழ்நாட்டிற்குப் இந்த திட்டத்தினால் கிடைக்கும் மற்றும்  அதிகரிக்கும் ஏற்றுமதி மூலம் அந்தக் குறை தீர உள்ளது.

  • சென்னையில் சமீபத்தில் நடந்த மாபெரும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடிக்கு அதிகப்படியான முதலீடுகள் குவிந்து உள்ளன. இந்த பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை (Petrochemical Factory In Thoothukudi) திட்டத்தின் வாயிலாகச் சுமார் 9 பில்லியன் டாலர்கள் முதலீடு ஆனது குவிய உள்ளது. 9 பில்லியன் டாலர்களுக்கான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஆனது இரு நிறுவனங்கள் தரப்பில் கையெழுத்தாகி உள்ளது. தற்போது கூட்டணியில் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆய்வு செய்ய பேச்சுவார்த்தை ஆனது நடைபெற்று  வருகிறது.

  • இந்த மாபெரும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை திட்டம் 100 சதவீதம் அன்னிய முதலீட்டின் வாயிலாக நடைபெற உள்ளது (கத்தார் அமைப்பின் மூலம் FDI முதலீடு பெறப்பட உள்ளது). இந்த மாபெரும்  பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை திட்டத்தை கத்தார் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் செயல்படுத்தி வருகிறார்.  இங்கிலாந்து நாட்டின் Lamant நிறுவனம் இத்தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  இந்த மாபெரும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை ஆனது 2000 ஏக்கரில் அமைய உள்ளது.  7500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மாபெரும்  பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை திட்டத்தின் மூலம் நேரடியாக 10000 பேருக்கும், மறைமுகமாக 40000 பேர் வரையிலும் வேலைவாய்ப்பு ஆனது  கிடைக்கும். மேலும் இந்த மாபெரும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை திட்டம் ஆனது 9 வருடத்தில் செய்யப்பட உள்ளது.

  • இங்கிலாந்து நாட்டின் Lamant நிறுவனத்திற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல துறையில் வர்த்தகம் செய்யும் சக்தி குரூப் லோக்கல் பார்ட்னராக இயங்க உள்ளது என சக்தி குருப்-ன் இயக்குனர் டி.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply