Chandramukhi 2 Review : சந்திரமுகி 2 படத்தின் திரைவிமர்சனம்

Chandramukhi 2 Review : இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் மிலாடி நபி விடுமுறையை குறிவைத்து இன்று வெளியாகியுள்ளது. காலாண்டு விடுமுறை என்பதால், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்தைப் பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் படத்தைத் தேர்வுசெய்வார்கள் என்று வெளியிட்டுள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்தை விட மிக நீளமான படமாக உருவாகி உள்ள சந்திரமுகி 2 முந்தியதா? என்கின்ற விமர்சனத்தை எல்லாம் விட்டு விட்டு டிக்கெட் வாங்கி நம்பிப் போன ரசிகர்களை மகிழ்வித்ததா? இல்லையா? என்ற விமர்சனத்தை தற்போது காணலாம்.

படத்தின் மையக்கருத்து :

ரங்கநாயகி வேடத்தில் நடிக்கும் ராதிகா சரத்குமார் குடும்பத்தில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிவரும் நிலையில், குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த குடும்பத்துடன் வேட்டையப்புரத்துக்கு வரும் ராதிகா சரத்குமார். தனது பெரிய குடும்பத்துடன் தங்க சந்திரமுகி பங்களாவிற்கு வருகிறது. பங்களாவில் அமானுஷ்யக் கதைகளைக் கேட்கும் வீட்டின் இளம் பெண் ஒருவர் சந்திரமுகியின் அறைக்குத் திரும்பிச் செல்லும்போது, ​​இந்த முறை உண்மையான சந்திரமுகி இறங்கி வருவதும் அதனை அடக்க வேட்டையன் வருவதுமாக மனோதத்துவ கதையாக வெளியான சந்திரமுகி 2 படத்தை பக்கா பேய் படமாக மாற்றிவிட்டனர்.

Chandramukhi 2 Review :

Chandramukhi 2 Review : முதல் பாகத்தில் ரஜினிகாந்த் – வடிவேலு இருவருக்குமான டபுள் மீனிங் நகைச்சுவை காட்சி திரையரங்கில் இருந்த பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ஆனால் அதே ஸ்டைலை ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலுவை வைத்து முயற்சி செய்து பி.வாசு தோற்றுவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மாமன்னனில் வடிவேலுவை அப்படிப் பார்த்துவிட்டு மீண்டும் கஷ்டப்பட்டு காமெடி பண்ணுகிறாரே சிரிக்க முடியவில்லையே என்று ரசிகர்கள், இதன்பிறகு காமெடி படங்களை வடிவேலு பார்த்துத் தான் பண்ண வேண்டும் என்றெ நினைக்க வைக்கிறது சந்திரமுகி 2 படத்தின் நகைச்சுவைக் காட்சிகள். சந்திரமுகி 2 என்று வெறுமனே தலைப்பிடாமல், சந்திரமுகியை இரட்டை வேடமாகக் காட்டி மிரட்டியிருக்கிறார் பி.வாசு.

நகைச்சுவையில் அவர் விட்டுச் சென்றதை, ஹாரரில் அள்ளிவிட்டனர். கிட்டத்தட்ட ரசிகர்கள் யூகித்த அதே நடிகைதான் சந்திரமுகி. ஆனால் இரண்டாம் பாதியில் நிஜ சந்திரமுகி கங்கனா ரனாவத் மற்றும் வேட்டையன் காட்சிகளை அதன் சுவாரசியமாக பி.வாசுவும் செதுக்கியுள்ளார். கங்கனா ரனாவத்தின் நடிப்பும், ராகவா லாரன்ஸின் நடிப்பும் இந்தப் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. பி.வாசு சந்திரமுகி டைட்டிலை வைத்துவிட்டோம், அதை சொதப்பிவிடக்கூடாது என மெனக்கெட்டு ரசிகர்களுக்காக ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் படத்திற்கு போராடியிருப்பது தெரிகிறது. லட்சுமி மேனன் உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

Chandramukhi 2 Review : கிராவணியின் BGM மிரட்டிய அளவுக்கு படத்தில் எந்த பாடலும் கை கொடுக்கவில்லை. வடிவேலுவின் காமெடி முழுவதுமாக சொதப்பியுள்ளது. ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் என ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும், சந்திரமுகி 2 குடும்பத்துடன் பார்க்கும் ஜாலியான படமாக முடிகிறது. காஞ்சனா தொடரில் இருந்து சந்திரமுகி தொடருக்கு ராகவா லாரன்ஸ் வருவார் என தெரிகிறது. பாண்டியனாக பட்டையை கிளப்பியுள்ளார். இந்த வார விடுமுறையில் குழந்தைகளுடன் சென்று இந்தப் படத்தைப் பார்த்து மகிழுங்கள்.

Latest Slideshows

Leave a Reply