DRDO Recruitment 2024 : 60 காலிப்பணியிடங்கள் ஐ.டி.ஐ (ITI) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • சென்னை ஆவடியில் உள்ள டி.ஆர்.டி.ஓ Defence Research And Development Organisation (DRDO) நிறுவனத்தில் ஐ.டி.ஐ (ITI) படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பானது (DRDO Recruitment 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் டி.ஆர்.டி.ஓ (DRDO) நிறுவனத்தின் ஒரு அங்கமான ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (CVRDE) தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு (DRDO Recruitment 2024) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

  • காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : சென்னை ஆவடியில் உள்ள ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் கீழ்காணும் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • COPA – 8
  • Electrician – 6
  • Fitter – 15
  • Machinist – 10
  • Electronics – 4
  • Turner – 5
  • Carpenter – 2
  • Draughtsman (Mechanical) – 4
  • Mechanic (Motor Vehicle) – 3
  • Welder – 3

  • கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு (DRDO Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

  • சம்பளம் (Salary) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு Welder, COPA, Carpenter ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சியுடன் ரூ.7700 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற பிரிவுகளுக்கு ரூ.8050 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

  • வயதுத் தகுதி (Age) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் OBC பிரிவினர் 30 வயது வரையிலும் SC/ST பிரிவினர் 32 வயது வரையிலும் PWD பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

  • தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ (ITI) பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

  • விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://drdo.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு 18.04.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

  • மேலும் விவரங்களுக்கு : https://www.drdo.gov.in/drdo/sites/default/files/career-vacancy-documents/advtcvrdeApp28032024.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply