Railway Jobs 2024 : 1113 காலிப்பணியிடங்கள் ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • தென்கிழக்கு ரயில்வேயின் (South Railway) ராய்ப்பூர் பிரிவில் அப்ரண்டீஸ் பயிற்சி இடங்கள் (Railway Jobs 2024) நிரப்பப்பட உள்ளன. சட்டிஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள DRM அலுவலகத்தில் 844 பணியிடங்கள் மற்றும் ராய்ப்பூரில் உள்ள வேகன் பழுதுபார்க்கும் பிரிவில் 269 பணியிடங்கள் என மொத்தம் 1,113 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
  • இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway Jobs 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : தென்கிழக்கு ரயில்வேயில் 1113 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் (Railway Jobs 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்களின் விவரம்

  • ஃபிட்டர் – 317
  • எலக்ட்ரீஷியன் – 226
  • வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) – 271
  • டர்னர் – 68
  • மெஷினிஸ்ட் – 30
  • மெக்கானிக்கல் டீசல் – 81
  • மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 35
  • சுகாதார ஆய்வாளர் – 25
  • ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) – 16
  • ஸ்டெனோகிராபர் (இந்தி) – 9
  • மெக்கானிக்கல் ரெஃப்ரிக் & ஏர் கண்டிஷனர் – 21
  • கணினி இயக்குபவர் / நிரல் உதவியாளர் – 14
  1. கல்வித் தகுதி (Educational Qualification) : தென்கிழக்கு ரயில்வேயில் இந்த அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ (ITI) முடித்து இருக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
  1. வயதுத் தகுதி (Age Qualification) : தென்கிழக்கு ரயில்வேயில் இந்த அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  விரும்புபவர்கள்  https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
  1. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : தென்கிழக்கு ரயில்வேயில் இந்த அப்ரண்டீஸ் (Railway Jobs 2024) பயிற்சி பணியிடங்களுக்கு 01.05.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
  1. மேலும் விவரங்களுக்கு :
    https://secr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply