AAI Jobs in 2024 : விமான துறையில் வேலைவாய்ப்பு 40 காலிப்பணியிடங்கள் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...!
சென்னை மற்றும் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா பொறியியல் சேவை நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களை (AAI Jobs in 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aircraft Technician (B1)
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
விமான துறையில் Aircraft Technician (B1) பணியிடங்களுக்கு மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித் தகுதி (Educational Qualification)
இந்த Aircraft Technician (B1) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering/ Diploma in Mechanical/ Aeronautical Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் பணி முன் அனுபவம் இருக்க வேண்டும்.
Aircraft Technician (B2)
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
விமான துறையில் Aircraft Technician (B2) பணியிடங்களுக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித் தகுதி (Educational Qualification)
இந்த Aircraft Technician (B2) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering/ Diploma in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் பணி முன் அனுபவம் அவசியம்.
3. சம்பளம் (Salary)
இந்த Aircraft Technician (B1) மற்றும் Aircraft Technician (B2) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ரூ. 27,940 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. வயதுத் தகுதி (Age Qualification)
இந்த இரண்டு பணியிடங்களுக்கும் 01.04.2024 அன்று வரை 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த இரண்டு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்
இந்த இரண்டு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25.04.2024 அன்று நடைபெறுகிறது.
7. மேலும் விவரங்களுக்கு
https://www.aiesl.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.