Dubai Program For Gaming 2033 - Platform Tamil

'Dubai Program For Gaming 2033' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

'Dubai Program for Gaming 2033' - Dubai-ன் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும் :

Dubai தீவிரமாக தனது டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த செயல்பட்டு வருகிறது மற்றும் Dubai-ன் கேமிங் துறையை அதிகரிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி ஆனது 2033க்குள் நகரத்தின் GDPயை சுமார் $1bn அதிகரிக்கும். Dubai-ன் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும். உலகளாவிய கேமிங் சந்தையில் நல்ல வருவாய் உள்ளது. இந்த வருவாய் ஆனது 2026 ஆம் ஆண்டுக்குள் 212.4 பில்லியன் டாலர்களை எட்டும் என்று Market Data Platform-ஆன Newzoo தனது August Market Update-ல் தெரிவித்துள்ளது.

இந்த 212.4 பில்லியன் எண்ணிக்கை ஆனது 2023 இல் மதிப்பிடப்பட்ட $187.7 பில்லியனில் இருந்து 13%-திற்கும் அதிகமாக இருக்கும். மேலும் இது 2022 ஆம் ஆண்டிலிருந்து 2.6% அதிகரிப்பைக் குறிக்கிறது. 2022 ஆம் ஆண்டில், ராஜ்ஜியத்தின் பொது முதலீட்டு நிதியானது கேமிங் துறையில் $3 பில்லியனுக்கும் மேல் முதலீடு செய்தது. Mena Region ஆனது 2027ல் $6 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2021 ஐ விட இருமடங்காகும் என்று DMCC தனது எதிர்கால வர்த்தக 2023 அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Dubai Program for Gaming 2033 திட்டத்தின் சிறப்புக்கள் :

Crown Prince Of Dubai H.H. Sheikh Hamdan Bin Mohammed Bin Rashid Al Maktoum தலைமையில் 02/11/2023 வியாழக்கிழமை நடைபெற்ற Higher Committee For Future Technology And Digital Economy கூட்டத்தில் Dubai Program for Gaming 2033 திட்டத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது திறமை, உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பம் (Talent Development, Content Creation மற்றும் Leveraging Advanced Technologies) உள்ளிட்ட மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும். இது VR மற்றும் AI போன்ற வளர்ந்து வரும் போக்குகளின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த திட்டம் ஆனது ஒரு 10 ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் கேமிங்கின் பங்களிப்பை $1 பில்லியனாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது உலக கேமிங் துறையில் முதல் 10 நகரங்களில் இடம் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புதிய முயற்சி ஆனது டெவலப்பர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், வடிவமைப்பாளர்கள், புரோகிராமர்கள், தொழில்முனைவோர் மற்றும் படைப்புத் தொழில்களில் ஸ்டார்ட்அப்களை அமைப்பதை ஆதரிக்கும். மேலும் கேமிங் துறையில் 2033-க்குள் 30,000 புதிய வேலைகளை உருவாக்கும். சர்வதேச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும். இந்த முயற்சியானது தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஆதரிப்பதோடு, சிறப்பு கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

30 வயதிற்குட்பட்ட 70% சவூதி அரேபிய மக்கள் டிஜிட்டல் ஆர்வமுள்ளவர்கள்.  UAE-ன் வளர்ந்து வரும் கேமிங் தொழில் ஆனது இந்த டிஜிட்டல் ஆர்வமுள்ள இளைஞர்களின் மக்கள்தொகை மூலம் தூண்டப்பட்டு ஒரு சிறந்த அனுபவமாக உருவாகி வருகிறது. அதிக வருமானம், அதிக செலவழிப்பு வசதிகள் மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக உட்புற நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் ஆர்வமுள்ளவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். இவர்கள் பிராந்தியத்தின் செழிப்பான கேமிங்கிற்கு பங்களிக்கின்றனர். இந்த திட்டம் ஆனது துபாயை உலகளாவிய கேமிங் துறையில் சிறந்த நகரங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும். உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை, குறிப்பாக டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களை இந்த திட்டம் ஆனது ஈர்க்கும்.

இந்த திட்டம் ஆனது உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் திறமையான நபர்களிடையே பொருத்தமான கூட்டாளர்களை அடையாளம் காணும். GCC இல் உள்ள பல்வேறு அரசாங்கங்கள் அதிக அளவில் முதலீடு செய்து கேமிங் நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்கும் உத்திகளை செயல்படுத்துகின்றன. Crown Prince Of Dubai H.H. Sheikh Hamdan Bin Mohammed Bin Rashid Al Maktoum மேலும் மூன்று புதிய முயற்சிகளை தொடங்க ஒப்புதல் அளித்தார். அவை Virtual Reality, Augmented Reality மற்றும் The Metaverse ஆகியவை ஆகும். இவை Metaverse Development-ல் World Leader-ராகவும்  மற்றும் Global Hub-கவும் துபாயின் நிலையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply