EB Bill Payment Via WhatsApp - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய புதுப்பிப்பு

தமிழக அரசின் மின்சார வாரியம் ஆனது ஒரு பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாடுகளின்கீழ் Tangedco எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகம் கழகம் மற்றும் Tantransco எனப்படும் தமிழ்நாடு தொடரமைப்பு கழகம் ஆகியவை துணை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் மின் உற்பத்தியில் நிலக்கரியை ஆதாரமாக கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் தான் பெரும்பங்கு வகிக்கிறது. இதைத்தவிர தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி மூலமும் மின் உற்பத்திக்கான வேலைகள் ஆனது நடந்து வருகின்றன.

EB Bill Payment Via WhatsApp - டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை :

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வாட்ஸ்-அப் வசதியை (EB Bill Payment Via WhatsApp) பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்களுக்கு தேவையான வசதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றது. மின் நுகர்வோர்கள் ஆன்லைன் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையானது    ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. தற்போது வாட்ஸ்-அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையானது அமுல் படுத்தப்படுகிறது. டிஜிட்டல் முறையான வாட்ஸ்-அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை   பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

அதாவது 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தி அதற்குரிய கட்டணத்தை செலுத்தும் மின் நுகர்வோர்கள் மட்டுமே வாட்ஸ்-அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் (EB Bill Payment Via WhatsApp) என்ற நிபந்தனை ஆனது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தி அதற்குரிய கட்டணத்தை செலுத்தும் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை ஆனது குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் 500 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கைதான் அதிக அளவில் உள்ளது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்சார நுகர்வோர்களும் பயன்பெறும் வண்ணம் இந்த வாட்ஸ்-அப் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஆனது தமிழ்நாடு மின்சார வாரியத்திடம்  முன்வைக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply