தனியார் நிலத்திலும் 100 நாள் வேலை திட்டம் | Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme

Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme 100 நாள் வேலை திட்டத்தை தனியார் நிலத்திலும் பணியாற்றாம். 100 நாள் வேலை திட்டம் என்பது கிராமப்புறங்களில் அரசு குறைந்தபட்சம் 100 நாட்களாவது கூலி வேலை அளிப்பது என்று நாம் அனைவரும் எடுத்து கொள்கிறோம். ஆனால் 100 நாள் வேலை திட்டம் என்பது 100 நாள் அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான மரம் நடுதல், பாசன வசதி, ஆழ்துளைக்கிணறு வெட்டுதல், தோட்டக்கலை, வீடு கட்டுதல்,குளங்கள் அமைப்பது போன்ற வேளைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் தங்களுடைய குடும்பத்தின் வருவாயை அதிகரித்து கொள்ளலாம்.

100 வேலை திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய விதிகள்

மத்திய அரசு கடந்த 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை கிராமங்களில் வறுமையை ஒழிப்பதற்காக இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் குறைந்தப்பட்சம் ஒரு ஆண்டுக்கு 100 நாட்களாவது வேலை அளிக்க வேண்டும். அரசு ( பஞ்சாயத்து அமைப்பு ) 100 நாட்கள் வேலை தர தவறினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்தில் கால் பங்கு தரவேண்டும். மேலும் வேலை தர தவறினால் பாதி ஊதியத்தை அரசு அபதாரமாக அரசு தரவேண்டம்.

Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme - Platform Tamil

இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கிராமப்புறங்களில் உள்ள கிராம குளங்களை தூர்வாருதல், ஏரிகள் மற்றும் ஆறுகள் தூர் வாருதல், சாலை பணிகளை அமைத்தல், வெள்ளம் தடுப்பு பணிகளை அமைத்தல் போன்ற பணிகளின் கீழ் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. 2014 ல் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு இதை முற்றிலும் மாற்றி அமைத்து 100 வேலை அட்டை வைத்திருப்பவர்களை பொது சொத்தில் இருந்து தனியார் நிலத்தில் வேலை செய்ய அதிகமாக ஊக்கமளித்தது.

வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100வேலை அட்டை உள்ள பட்டியல் இனத்தவர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியல் பழகுடியினர், நல சீர்திருத்த பயனாளிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், மாற்றுத்திறனாளி, பெண் தலைமையிலான குடும்பங்கள் 2008ம் ஆண்டின் விவசாய கடன் ரத்து திட்டத்தின் பயனாளிகள் குடும்பத்திற்கு பாசன வசதி, தோட்டக்கலை சாகுபடி, மரம் நடுதல் மற்றும் நிலம் மேம்பாடு செய்து கொடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனிநபர் மேம்பாட்டு பணிகளில் கீழ், வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80% பணிகள் வழங்கப்பட்டன. இராஜஸ்தான் மாநிலம் 62% பணியாளர்களை நீர் பாசனம் மற்றும் வளர்ச்சி தடுப்பு வேளைகளில் ஈடுபடுத்தி வருகிறது.

Leave a Reply

Latest Slideshows