Express Way - Platform Tamil

4 மணி நேரத்தில் திருச்சி - சென்னையை இணைக்க பிரம்மாண்ட Express Way அமைக்கப்பட உள்ளது

திருச்சி - சென்னையை இணைக்க பிரம்மாண்ட Express Way :

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை (NHAI) ஆனது சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாற்றங்கள் ஆனது  செய்யப்பட்டு வருகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த 2024-ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலைதிட்டம் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீள பாலமாக இந்த உயர்மட்ட சாலை ஆனது அமைக்கப்பட உள்ளது. இப்போது இந்த மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் பகுதியை கடக்க குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆனது ஆகிறது. இந்தப் பாலம் கட்டப்பட்டால் இந்த மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் பகுதியை 10 -15 நிமிடத்தில் எளிதாக கடக்கலாம். இடை இடையே மக்கள் வெளியேற மற்றும் உள்ளே வர இணைப்பு பாலங்கள் ஆனது அமைக்கப்படும்.

தற்போது இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஆனது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான கையகப்படுத்தப்பட வேண்டிய நிலத்தின் அளவு ஆனது முழுமையான ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். மொத்தமாக 470 கிமீ தூரத்திற்கு இந்த Express Way சாலை அமைக்கும் பணிகள் ஆனது நடந்து கொண்டு இருக்கின்றன.

  • சென்னை-திருச்சி விரைவுச்சாலை – 310 கி.மீ நீளம்.
  • பிள்ளையார்பட்டி-தூத்துக்குடி வழித்தடம் – 160 கி.மீ நீளம்

ஏற்கனவே இந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 4 வழி சாலை பகுதியில் கூடுதல் நிலம் ஆனது கையகப்படுத்தப்பட்டு அது 8 வழி சாலையாக மாற்றப்படும் என்று தகவல்கள் வருகின்றன. தற்போது இங்கே பயண நேரம் 5. 55 மணி நேரமாக உள்ளது. இந்த Express Way ஆனது அமைக்கப்பட்டால் சென்னை-திருச்சி 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக அமையும்.

தேசிய நெடுஞ்சாலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன :

தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் ஆனது கட்டப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட பாலங்கள், சிட்டி உள்ளே நுழையும் பகுதிகளில் பாலங்கள் மற்றும் நெருக்கடி நிறைந்த BHEL-ல் சுற்றுவட்டார பகுதிகளில் பாலங்கள் ஆனது அமைப்பதற்கான பணிகள் நடத்தப்பட உள்ளன. இடை இடையே மக்கள் வெளியேற மற்றும் உள்ளே வர இணைப்பு பாலங்கள் ஆனது  அமைக்கப்பட்டு மிக பிரம்மாண்ட பாலமாக அமைய உள்ளது. இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று (NHAI) அறிவித்துள்ளது. அதன்பின் இதற்கான டெண்டர் ஆனது விடப்படும். இன்ஸ்டாகிராமில் இந்த சாலையின் சூப்பர் வீடியோ ரீல்ஸாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply