Facts About Parrot in Tamil: செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும்  கிளிகள்

மனிதர்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கக் கூடிய நாய், பூனை, மீன் மாதிரியான உயிரினங்களின் வரிசையில் உலகிலே அதிகமான அளவிற்கு செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகின்ற பறவைகளிள் கிளிகள்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதேசமயம் உலகிலேயே அழியக்கூடிய விளிம்பில் இருக்கக்கூடிய பறவையும் கிளிகள்தான். அதற்காகத்தான் இந்திய அரசு சட்டப்படி வளர்க்க கூடாத செல்லப் பிராணிகள் வரிசையில் கிளைகளையும் இணைத்துள்ளது.

கிளிகள் மனித  மொழியை அற்புதமாக மிமிக்கிரி செய்யக்கூடிய  ஒரு அழகான உயிரினம். இப்படி மிமிக்கிரி செய்வதால்தான் அவை அனைவருக்கும் பிடித்த அதிகமாக வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகளாகஇருக்கிறது. உலகிலுள்ள ஒட்டுமொத்த கிளிகளுடைய தொகைகளில்  50% சதவீத கிளிகள் மனிதர்களால் செல்லப் பிராணிகளாக வளர்ப்படுகிறது. இப்படி செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் கிளிகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

கிளி என்பதற்கு அடையாளம் காண இருப்பது அதனுடைய அலகு. மற்ற பறவைகளை காட்டிலும் கிளி தனித்துவமாக தெரிய காரணம் அதனுடைய அலகு தான். நன்றாக வளைந்த முனையோடு இருக்கும். செங்குத்தாக நிற்கிற தன்மை, பலமான கால்கள். இவையெல்லாம் கிளிக்கான பிரத்யேக அடையாளங்கள். கிளிகளின் கால்கள் மிகவும் வித்தியாசமானது. பறவைகளில் மொத்தம் நான்கு விதமான பாதங்கள் இருக்கிறது. இதில் கிளிகளின் பாதங்கள் சய்க்கோடாக்டெயில் (Zygodactylie) என்னும் வகையை சேர்ந்தது.

இந்த வகையில் இரண்டு, மூன்று விரல்கள் முன்பக்கமாகவும் ஒன்று, நான்கு விரல்கள் பின் பக்கமாகவும் அமைத்திருக்கும். இந்த கால் அமைப்பு இவ்வாறு இருப்பதால் மர கிளைகளை பிடித்து நன்றாக நடக்க முடியும். கிளைக்கு கிளை நடந்தே சென்று தாவ கிளிகளால் முடியும். ஏன் இப்படி ஒரு அமைப்பு கிளிகளுக்கு இருக்கிறது என்றால் அவைகள் ஆர்போரியல் லோகோமோஷன் (Arboreal locomotion) கொண்ட உயிரினங்களின் வகைகளில் வருகிறது. அதாவது ஆர்போரியல் லோகோமோஷன் இருக்கக்கூடிய உயிர்கள் எல்லாம்  அதிகமாக மரங்களில்தான் வாழும்.

மரத்திற்கு மரம் தாவவும் செய்யும்.கிளிகளும் மரங்களில் அதிக அளவு தாவாமல் மரங்களில் நடக்கத்தான் அதிகம் விரும்பும். கிளிகள் வருடத்திற்கு இரண்டில் இருந்து நான்கு முட்டைகள் இடும். சிறிய கிளிகள் ஒன்றிலிருந்து மூன்று முட்டைகள் இடும். கிளிகளின் அடைக்காக்கும் காலம் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடும் என்று சொல்லப்படுகிறது. கிளிகள்  கூடுகள் கட்டி முட்டை இடாது. மர பொந்துகளில்தான் முட்டையிடும்.

வீட்டில் வளர்க்கப்படும் கிளிகள் அதற்கு அமைத்து கொடுக்கும் கூண்டுகளில் முட்டையிடும். கிளைகளில் 30 வருடம் வாழக்கூடிய கிளிகள் மற்றும் 100 வருடம் வாழக்கூடிய கிளி இனங்களும் இருக்கிறது. சாம்பல் நிற கிளிகள் அதிகம் பேசக்கூடிய கிளிகளாகும். கிளிகளுக்கு அதிகமான அறிவாற்றல் இருக்கிறது.

கிளிகளின் வகைகள்

கிளிகளுக்கு சிட்டாசின் Psittacins என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. சிட்டாசின் என்பது கிரேக்க மொழிகளில் கிளிக்கு இருந்த பெயர்களில் இருந்து மருவி வந்தது. உலகத்தில் மொத்தம் 398 வகைகளில் கிளிகள் இருக்கிறது. இந்த 398வகைகளும் 3 குடும்பங்களாக பிரிக்கப்பட்டு சிட்டாசி ஃபாம்ஸ் என்னும் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று குடும்பங்களில்

1. சிட்டாகோடியா (Psittacoidea) வகைகளில் இருக்கக்கூடிய கிளிகள்தான் உண்மையான கிளிகள் என்று சொல்லப்படுகிறது. அதே போன்று

2. ககடோட்டிடியா (Cocotuoidea) குடும்பத்தின் வரிசையில் ககடூஸ்கள் என்னும் கிளி வகைகள் வரும்.

3. ஸ்ட்ரிகோபோடியா (Strigopoidea) வரிசையில் நியூசிலாந்துகளில் இருக்கக்கூடிய கிளிகளின் வகைகள் வரும்.

உலகில் இவ்வளவு கிளிகள் இருந்தாலும் அவற்றில் பெரும்பான்மையாக ஆண் எது? பெண் எது? என்று பிரித்து பார்க்க முடியாது. இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதியாக இருக்கும். இருப்பினும் சில கிளிகளில் மட்டும் ஆண், பெண் என்ற வேறுபாடு பார்க்கமுடியும். பச்சை கிளிகளில் கழுத்து பகுதியில் உள்ள வளையங்கள் வைத்து அவற்றில் ஆண், பெண் அடையாளம் காணமுடியும். அதிலும் ஆணையும்,பெண்ணையும் துல்லியமாக அடையாளம் படுத்தக்கூடிய கிளி வகை எக்லடஸ் என்னும் கிளி வகை இதில் ஆண் கிளி பச்சை நிறத்திலும் இறக்கைகள் நீல நிறத்தில் இருக்கும்.

பெண் கிளி உடல் சிவப்பு நீல நிறத்தில் இருக்கும். இந்த இரண்டையும் வைத்து ஆண் எது, பெண் எது என்று துல்லியமாக அறிய முடியும். உலகிலேயே மிகச்சிறிய கிளி இனம் பிக்மி இதன் அளவு மூன்றரை அங்குலம்தான் இருக்கும். பெரிய வகை கிளியினம் மெக்கா கிளி ஆகும். இது 100 செ.மீ  வரையிலும் வளரும் இதன் எடையும் 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கும். மற்ற கிளிகளின் அலகை விடவும் மெக்கா கிளிகளின் அழகு மிகவும் பலமானது.

தேங்காவின் ஓடுகளையும் தனது அழகுகளினால் உடைத்து நொறுக்கும் அளவிற்கு பலமாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த மெக்கா வகைகள் 80 வருடங்கள் வரை உயிர்வாழும். அதே போன்று சாதாரண கிளிகளை விட மெக்கா கிளிகள் வளர்ப்பாளர்களிடம் மிகவும் இணைப்புடன் பாசமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

உலகிலேயே பறக்க முடியாத கிளி இனம் கக்காப்பொ இனம் தான் இந்த கிளிகளுக்கு இறக்கைகள் இருந்தாலும் அவை பறப்பதற்கு அந்த இறக்கைகளை பயன்படுத்துவதில்லை நடப்பதற்கே பயன்படுத்துகிறது.

கிளிகளின் இறகுகள்

கிளிகள் பல நிறங்களில் இருந்தாலும் இந்த அழகான நிறம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அதன் இறகுகளில் தான் பதில் இருக்கிறது. கிளிகளின் இறகுகளில் சிட்டாஃகோல்பூவின் (Psittacofulvin) என்னும் பிக்மண்ட் இருக்கிறது. பொதுவாக பறவைகளுக்கு அதனுடைய நிறங்கள் என்பது இரண்டு வகைகளில் வரும்.

ஒன்று பிக்மண்ட் மூலமாக வரும். மற்றொன்று அதனுடைய இறகுகளில் இருக்கக்கூடிய அமைப்பின் மூலமாக அதன் மேல் வெளிச்சம் பட்டு வெளிச்சம் பிரதிபலிப்பதாலும் நிறங்கள் உருவாகும். இதில் பிக்மண்ட் மூலமாக நிறங்கள் உருவாவதற்கு பறவை இனங்கள் அந்த நிறங்களை அவைகள் சாப்பிடக்கூடிய உணவு பழக்கத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறது. உதாரணத்திற்கு பிங்க்பிளமிங் பறவைகளை கூறலாம்.

பறவை இனங்கள் அதற்கு தேவைப்பட கூடிய நிறத்தை அவை சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் இருந்து எடுத்துக்கொள்கிறது. ஆனால் கிளி மட்டும்தான் தனக்கு தேவையான நிறத்தை உற்பத்தி செய்யக்கூடிய பிக்மண்டை தனக்கு தானே உற்பத்தி செய்துகொள்ளக்கூடிய ஒரு உயிரினம். அந்த பிக்மண்ட் தான் சிட்டாஃகோல்பூவின்.

இந்த சிட்டாஃகோல்பூவின் பிக்மண்டை தனது உடலில் இருக்கக்கூடிய கால்சியம் மாதிரியான மினரல்களை பயன்படுத்தி கிளிகள் உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்த பிக்மண்டோடு தனது இறகுகளின் அமைப்பை பயப்படுத்தி வெளிச்சத்தையும் பிரதிபலித்து தனக்கு தேவையான அழகிய நிறங்களை கிளிகள் உற்பத்தி செய்கிறது.

கிளிகளின் உணவு

பறவைகள் விதைகளை தூவக்கூடிய ஒரு விவசாயி என்றே கூறலாம். அதாவது பறவைகள் பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை எச்சங்களாக ஆங்காங்கே தூவி விட்டு மரங்களும், செடிகளும் அதிகமாவதற்கு உதவி செய்யும் உயிரினம்தான் பறவைகள். ஆனால் இதற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பவைகள்தான் கிளிகள்.

கிளிகளின் முக்கிய உணவே விதைகள்தான். எப்போதுமே விதைகளைத்தான் கிளிகள் விரும்பி உட்கொள்ளும். விதைகளை சாப்பிடுவதற்காகத்தான் கிளிகள் பழங்களை சாப்பிடுகிறது. விதை மட்டுமின்றி பூவில் இருக்கிற நெக்ட்டாரை சாப்பிடும் கிளி இனங்கள் இருக்கிறது. வேட்டையாடி சாப்பிடும் கிளி இனங்களும் இருக்கிறது. இறந்து அழுகிய உடலை சாப்பிடும் கிளி இனங்களும் இருக்கிறது.

கிளிகளின் அழிவு

நாம் வீட்டில் செல்லப் பிராணிகளாக கிளிகளை வளர்பதால்தான் காடுகளில் கிளிகள் குறைகிறது. அதிக அளவு செல்லப் பிராணியாக வளர்க்கக்கூடிய பறவை இனம் பட்ஜிஸ்.இதை காதல் பறவை (love birds) என்றும் சொல்லப்படுகிறது. இவைகள் கிளி இனத்தை சேர்ந்தது.

இதற்கு Parakeet, Shell parrot, Canary parrot, Zebra parrot, Scallop parrot என்று பல பெயர்கள் இருக்கிறது. இவ்வளவு அதிகமான கிளிகள் வீட்டில் இருக்கக்கூடிய கூண்டுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுவதால்தான் கிளிகளின் இனம் பேரழிவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. செல்லப் பிராணிகளாக வளர்ப்பில் கிளிகள் அதிகமாக இருப்பதால் மற்றும் கிளிகள் நிறைய வாங்கப்படுவதால் சந்தைகளில் கிளிகளின் தேவை அதிகமாக இருப்பதால் காடுகளில் கிளிகளை வேட்டையாடி விற்கின்றனர்.

கிளிகள் அதனுடைய இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு விலைகளில் விற்கப்படுகிறது. லட்ச கணக்கிலும் கிளிகள் சந்தைகளில் விற்கப்படுகிறது. செல்லப் பிராணிகளாக கிளிகளை காடுகளில் வேட்டையாடுவதால் கிளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் கிளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்படுகிறது. எப்படி என்றால் கிளிகள் பறக்காமல் இருக்க அதன் இறக்கைகளை வெட்டிவிடுகின்றனர். இதனால் கிளிகளுக்கான தன்னம்பிக்கை குறைகிறது. மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதனால் கிளிகளை பாதுகாப்பான முறைகளில் வளர்க்க வேண்டும்.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Karthik

    Itís nearly impossible to find educated people for this subject, but you sound like you know what youíre talking about! Thanks

Leave a Reply