Fingerprint Scanner To Check Registration Fraud : ஆள்மாறாட்டம் மோசடிக்கு ஒரு முற்றுப்புள்ளி

Fingerprint Scanner To Check Registration Fraud - விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய வசதியை பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது :

  • பத்திரங்களை பதிவு செய்வதில் ஏற்படும் ஆள் மாறாட்டத்தை தடுக்க, சார்பதிவாளர் அலுவலகங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் ஆகியோரின் விபரங்களின் உண்மை தன்மையை, ‘ஆதார்’ பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதி ஆனது அனைத்து அலுவலகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளபோதும் பல இடங்களில் ஆள் மாறாட்டம்  நடைபெற்று  வருவதாக புகார்கள் உள்ளன.

தமிழக அரசு பத்திரப்பதிவு துறையில் ஒரு புதிய வசதியை அமல்படுத்தி உள்ளது :

தற்போது ஆவணப்பதிவின் போது சொத்தை விற்பவரின் விரல்ரேகைப் பதிவை ஒப்பிட்டு பார்க்கும் வசதி (Fingerprint Scanner To Check Registration Fraud) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நபர், சொத்தை விற்கும்போது அவர் தனது சொத்து விற்பனையை ஒப்புக் கொள்ளும் முகமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் அவரது விரல் ரேகை ஆனது பதிவு செய்யப்படும். இப்போது இந்த சொத்து தொடர்பான முந்தைய ஆவணப்பதிவின் போது அவரிடம் பெறப்பட்ட விரல்ரேகையுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். முந்தைய ஆவணப்பதிவின் போது சொத்து உரிமையாளரிடம், வாங்குபவர் நிலையில் அவரிடம் பெறப்பட்ட விரல்ரேகையுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்போது, இந்த இரண்டு விரல் ரேகைகளும் ஒத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே பதிவுக்கு ஏற்கும் வண்ணம் ஸ்டார் 2.0 மென்பொருளில் மாற்றம் ஆனது செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியை பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சென்னை நந்தனத்தில் உள்ள சைதாப்பேட்டை இணைப்பு 1 சார்பதிவாளர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் ஆகியோரின் கைரேகை உள்ளிட்ட, ‘பயோமெட்ரிக்’ விபரங்கள், புகைப்படங்கள் (Fingerprint Scanner To Check Registration Fraud) பெறப்படுகின்றன.

தமிழகத்தில் பத்திர ஆபீஸில் இனி ஆவண பதிவில் சிக்கல் வராது :

ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும் போது, அந்த சொத்தை விற்பவரின் கைரேகை ஆனது அதன் முந்தைய பதிவின் போது பெறபட்டதுடன் ஒத்துப்போக வேண்டும். இதை கண்டுபிடிப்பதற்கான புதிய வசதி, ‘ஸ்டார் 2.0’ மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பவரின் கைரேகை முந்தைய பதிவுடன் ஒத்துப்போனால் மட்டுமே புதிய பதிவு (Fingerprint Scanner To Check Registration Fraud) மேற்கொள்ளப்படும். அப்படி  பொருந்தாத நிலையில் சார்பதிவாளர் ஆவணப்பதிவின் உண்மை நிலையை கண்டுபிடித்து விசாரிக்கப்பட்டு பின் பதிவினை மேற்கொள்ளும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்ட மோசடி முற்றிலும் தவிர்க்கப்பட்டு பொதுமக்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகிறது. தற்போது கடந்த 2018 Feburary 13-க்கு பின் பதிவான ஆவணங்களுக்கு மட்டுமே இந்த புதிய வசதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2018 Feburary 13-க்கு முந்தைய பிற ஆவணங்களுக்கு இது விரிவுபடுத்தப்படுமா? என்பது பின்னர் தெரியப்படுத்தப்பட்டும். தமிழகத்தில் பத்திர ஆபீஸில் இனி ஆவண பதிவில் சிக்கல் வராது.

Latest Slideshows

Leave a Reply