Garlic Benefits : வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பூண்டுப் பற்களை பச்சையாக ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்நிலையில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை (Garlic Benefits) தற்போது காணலாம். உங்கள் நாளை சில பூண்டு பற்களுடன் தொடங்குவது நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். பூண்டு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. காலையில் தினமும் ஒரு கிளாஸ் நீருடன் பூண்டை சாப்பிடுவது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவுகிறது. சமையலைப் பொறுத்த வரையில் பூண்டு மிக முக்கியமான பொருள். பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு சிறந்த பங்கு வகிக்கிறது. இந்த பூண்டுப் பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Garlic Benefits - பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :

செரிமானத்திற்கு உதவுகிறது :

Garlic Benefits : காலையில் எழுந்தவுடன் பூண்டு சாப்பிட்டால் செரிமானம் நன்றாக இருக்கும். பூண்டு உங்கள் செரிமான கோளாறுகளை தடுக்க உதவுகிறது. பூண்டு ஆனது நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைகிறது. இதனால் அதிக எடை கொண்டவர்கள் பூண்டை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற :

Garlic Benefits : பூண்டு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது நீரிழிவு, மன அழுத்தம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களில் இருந்து விடுபட உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்க :

Garlic Benefits : பூண்டை பச்சையாக சாப்பிடுவது நமது உடலில் உள்ள இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது நீரிழிவு அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

காசநோய்க்கு பயன்தரும் :

Garlic Benefits : காசநோய் போன்ற சுவாசக் குழாய் தொற்றுகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். தினமும் பூண்டு சாப்பிடுவது காசநோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

சளி மற்றும் இருமலை போக்க :

Garlic Benefits : சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து ஆகும். தினமும் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், சளி மற்றும் இருமல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இதய நோய்களை தடுக்க உதவுகிறது :

Garlic Benefits : பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இதயக் குழாய்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அதனால் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த :

Garlic Benefits : பூண்டு அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால் கண் தொற்றுகள் வராமல் தடுக்கலாம்.

சிறுநீரக பாதை நோய்த்தொற்றை தடுக்க :

Garlic Benefits : பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அதனை தடுக்க பெண்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது. நமது உடலில் முக்கியமான செயல்பாடுகளை பூண்டு மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும். எனவே பூண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நீண்ட காலம் வாழலாம். நீங்கள் இந்த பூண்டு பற்களை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். தோல் நீக்கிய பூண்டை தேனில் 10 நாட்கள் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கொலஸ்ட்ரால் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பூண்டை சாப்பிட்ட பிறகு யாருக்கேனும் குமட்டல், வாயு, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பூண்டு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply