Indian Team Arrival In India - Platform Tamil

Indian Team Arrival In India : உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் தாயகம் (Indian Team Arrival In India) வந்தடைந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கைப்பற்றும் ஐசிசி கோப்பை இதுவாகும். இதேபோன்று 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர், சுமார் 17 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

Indian Team Arrival In India - தாயகம் வந்தடைந்த இந்திய வீரர்கள் :

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு இந்திய அணி இன்று காலை 6.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இந்தியா உடனடியாக நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்படாஸில் புயல் எச்சரிக்கை விடப்பட்டது. பலத்த மழை மற்றும் பலத்த சூறாவளிக்காற்று காரணமாக அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு 4 நாட்களுக்குப் பிறகு இந்திய அணி இன்று டெல்லி வந்தடைந்துள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு :

தனி விமானம் மூலம் வீடு திரும்பிய வீரர்களுக்கு நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா, இந்தியா என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து வீரர்கள் தங்கவுள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலிலும் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக டி20 உலகக் கோப்பை வடிவில் கேக் செய்யப்பட்டு, அதில் இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply