Infosys Signs 5-Years Deal With Liberty Global: 5 ஆண்டு ஒப்பந்தத்தை Infosys அறிவித்தது...

Infosys Signs 5-Years Deal With Liberty Global :

5 ஆண்டு ஒப்பந்த ஆர்டர் மதிப்பு மற்றும் பிற விவரங்கள் :

Infosys Signs 5-Years Deal With Liberty Global: சமீபத்திய மாதங்களில் Infosys பெற்ற நான்காவது பெரிய ஒப்பந்தம் இதுவாகும். Liberty Global உடனான Infosys-ஸின் ஒப்பந்தம் முக்கியமானது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Infosys, ஐரோப்பாவை தளமாகக் கொண்ட தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு குழுவான Liberty Global-டன் ஐந்தாண்டு மெகா ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. Infosys ஒப்பந்த வெற்றியை அறிவித்துள்ளது. இந்த Liberty Global நிறுவனமானது ஒரு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட், வீடியோ மற்றும் மொபைல் தகவல் தொடர்பு சேவை நிறுவனமாகும்.

Infosys ஆனது Liberty Global என்ற தகவல் தொடர்பு நிறுவனத்தின் €1.5 பில்லியன் ($1.6 பில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. Liberty Global உடனான Infosys-இன் இந்த €1.5 பில்லியன் ஒப்பந்தம் முக்கியமானது, ஏனெனில் Infosys-இன் போட்டியாளரான TCS சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஓய்வூதியத் திட்டமான NEST இலிருந்து $1.1 பில்லியன் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.

இந்த Liberty Global ஒப்பந்தம் பிப்ரவரி 2020 இல் கையொப்பமிடப்பட்ட அவர்களின் ஆரம்ப ஒத்துழைப்பின் நீட்டிப்பாகும். Infosys  2020 ஆம் ஆண்டு முதல் Liberty Global-பலை ஆதரித்து வருகிறது. Liberty Global-லுடன் ஐந்தாண்டு மெகா ஒப்பந்தத்தில் வெற்றி பெற்று அதை எட்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் நீட்டிக்கும் விருப்பத்துடன் Infosys ஆனது ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.   

இந்த ஒப்பந்தம் 8 ஆண்டுகள் வரை சென்றால், மொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு ஆனது €2.3 பில்லியன் முதல்  $2.5 பில்லியன் யூரோவாக உயரும். லிபர்ட்டி குளோபலின் ஹொரைசன் பொழுதுபோக்கு மற்றும் இணைப்பு தளங்களின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளை இன்ஃபோசிஸ் எடுத்துக் கொள்ளும்.

Liberty Global-லின் ஹொரைசன் பொழுதுபோக்கு தளங்களை, செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் டிஜிட்டல் பொழுதுபோக்குகளை மற்றும் இணைப்பு தளங்களை உருவாக்க Infosys ஆனது உதவும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 400க்கும் மேற்பட்ட Liberty Global ஊழியர்கள் Infosys-க்கு மாறுவார்கள். Liberty Global-லின் தயாரிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, சேவை வழங்கல், நெட்வொர்க் & பகிரப்பட்ட செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து மூத்த நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள்  Infosys IT மேஜருக்கு மாறுவார்கள்.

Infosys-ஸில் சேரும் 400க்கும் மேற்பட்ட Liberty Global தொழிலாளர்களுக்கு இந்த ஒப்பந்தம்  ஆனது குறிப்பிடத்தக்க வாய்ப்புக்களை வழங்கும். நிறுவனத்தின் நெட்வொர்க் மற்றும் பகிரப்பட்ட செயல்பாடுகள், தயாரிப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டு சேவை விநியோக குழு மற்றும் பாதுகாப்பு குழுக்களின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு மாற்றப்படும்.

Infosys அதன் Topaz AI சலுகைகளை இணைக்க திட்டமிட்டுள்ளது, BSE பரிமாற்றத் தாக்கல் படி இந்த ஒத்துழைப்பு Liberty Global- க்கு மற்ற சேமிப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் உட்பட €100 மில்லியன் யூரோக்களுக்கு மேல் அதிகமான வருடாந்திர சேமிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Liberty Global ஆனது தயாரிப்பு சாலை வரைபடங்கள் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்து பராமரிக்கும் மற்றும் Horizon இயங்குதளங்களுக்கான அனைத்து அறிவுசார் சொத்துக்களையும் தக்க வைத்துக் கொள்ளும். Liberty Global நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் ஃப்ரைஸ் கருத்துப்படி, Liberty Global அவர்களின் பொழுதுபோக்கு தீர்வுகளை புதிய தலைமுறை டிஜிட்டல் முதல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாற்ற இந்த ஒப்பந்தம் உதவும்.

Infosys பெற்ற நான்காவது பெரிய ஒப்பந்தம் | Infosys Signs 5-Years Deal With Liberty Global :

சமீபத்திய மாதங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மந்தநிலைக்கு மத்தியில், Infosys பெற்ற நான்காவது பெரிய ஒப்பந்தம் லிபர்ட்டி குளோபல் ஒப்பந்தமாகும்.

கடந்த மே மாதத்தில் பிரிட்டிஷ் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான British Oil And Gas Major BP- யுடன் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐந்தாண்டு கால ஒப்பந்தத்தை Infosys வென்றது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.

கடந்த  ஜூன் மாதத்தில் Danske Bank வங்கியுடன் $454 மில்லியன் மதிப்புள்ள ஐந்தாண்டு கால புதிய ஒப்பந்தத்தில் Infosys கையெழுத்திட்டது.

கடந்த மாதம் $2 பில்லியன் மதிப்பிலான தற்போதைய மூலோபாய வாடிக்கையாளருடன் ஒரு ஒப்பந்தத்தை Infosys (Infosys Signs 5-Years Deal With Liberty Global) அறிவித்தது.

கூட்டாண்மை குறித்து Infosys தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் கருத்துக்கள் :

Infosys தலைமை நிர்வாக அதிகாரி சலில், உலகளாவிய நுகர்வோருக்கு புதுமையான AI மற்றும் டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதற்கான ஒத்துழைப்பின் திறனை எடுத்துக்காட்டுகிறார். லிபர்ட்டி குளோபல் Infosys மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், சந்தைகள் முழுவதும் செயல்பாடுகளை அளவிடுவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் பரேக் வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்தமாக, லிபர்ட்டி குளோபல் உடனான ஒப்பந்தம், உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பொழுதுபோக்கு மற்றும் இணைப்புச் சேவைகளை வழங்குவதில்  Infosys முக்கியப் பங்காற்றுகிறது என்று Infosys தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக், கூட்டாண்மை குறித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

Infosys-இன் உலகளாவிய செயல்பாடுகளின் வலிமையானது சந்தைகள் முழுவதும் வணிக அளவை அதிகரிக்க உதவும் மற்றும் Infosys-க்கு புதிய திறமையாளர்களையும், கண்டுபிடிப்பாளர்களின் குழுக்களையும் வரவேற்கும். Liberty Global எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வளர்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று  Infosys-இன் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply