Interesting Facts About Horse - Platform Tamil

Interesting Facts About Horse : குதிரைகள் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள்

‘குதிரை’ என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். குதிரை சவாரி என்றாலே எல்லா வயதினரையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. குதிரைகள் மனிதர்களுடன் நட்பாக பழகக்கூடியவை. வெளிநாடுகளைப் போலவே இந்தியாவிலும் குதிரை வளர்ப்பில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 4000 ஆண்டுகளுக்கு முன்பு, குதிரைகள் மனிதனால் வளர்க்கப்பட்ட விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை, மேற்கில் மனித போக்குவரத்து மற்றும் ஏர் உழவு ஆகியவற்றில் குதிரை உதவியாக இருந்தது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாகும். இந்நிலையில் குதிரைகளை பற்றிய சில சுவாரசியமான (Interesting Facts About Horse) தகவல்களை காணலாம்.

Interesting Facts About Horse - குதிரைகள் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள் :

  • குதிரையின் ஆயுள் காலம் : இனம், மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து குதிரைகள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை வாழ்கிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில குதிரைகள் 40 வயதுக்கு மேல் கூட வாழ்ந்திருக்கின்றன. குதிரைகளின் கர்ப்ப காலம் 335 முதல் 340 நாட்கள். குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்கத் தொடங்கிவிடும். ஐந்து ஆண்டுகளில் அவை இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன.

  • குதிரையின் உடலமைப்பு : ஒரு சராசரி குதிரையின் உயரமானது அதன் கழுத்தும, உடலும் சந்திக்கும் பகுதியின் அதிகபட்ச உயரப்பகுதியைக் கொண்டு அளவிடப்படுகிறது. சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குல உயரம் வரை வளரும். ஒரு குதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் இருக்கும். குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால், குதிரைகளுக்கு காறையெலும்பு இல்லை என்பதுதான். குதிரைகள் வெள்ளை, சாம்பல், கருப்பு, சிகப்பு, பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படும். அதிகபட்ச வேகம் குதிரையின் முக்கிய குணங்களில் ஒன்றாகும். இது 88 கிமீ வேகத்தில் ஓடும்.

  • குதிரையின் உறக்கம் : குதிரைகள் நின்றுகொண்டும், படுத்துக்கொண்டும் தூங்கும். குதிரைகளின் கால்களில் உள்ள ஒரு சிறப்பு அமைப்பின் காரணமாக அவற்றால் விழாமல் நின்று கொண்டே தூங்க முடியும். ஒரு குதிரை சராசரியாக ஒரு நாளைக்கு 2.9 மணி நேரம் தூங்குகிறது. கூட்டமாக இருக்கும் போது குதிரைகள் நன்றாக தூங்கும். பெரும்பாலான குதிரைகள் தூங்குவதால், சில குதிரைகள் இரைகொல்லிகள் வருகின்றனவா என்று பார்த்திருக்கும். தனித்து விடப்படும் குதிரைகள் இந்த பய உணர்வினால் நன்றாக தூங்காது.

  • குதிரையின் உணவு : குதிரைகள் தாவர வகைகளையே அதிகமாக உண்ணுகின்றன. அதன் பற்களும் தாவரங்களை உண்ணும் அளவிற்கு உள்ளன. குதிரையின் வாயில் ஒரு நாளைக்கு 40 லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. இது உணவை மென்று உண்ண செய்கிறது. 450 கிலோ எடையுள்ள நன்கு வளர்ந்த குதிரை ஒரு நாளைக்கு 7 முதல் 11 கிலோ தீவனத்தை உண்ணும். மேலும் 38 முதல் 45 லிட்டர் தண்ணீரையும் அருந்துகிறது. முக்கியமாக, குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது. நச்சுப் பொருட்களை சாப்பிட்டால் குதிரையின் மரணத்திற்கு வழிவகுக்கும்.

Latest Slideshows

Leave a Reply