Interesting Facts About Owl: ஆந்தையின் அறியப்படாத தகவல்கள்

பறவை இனங்களிலே நாம் பார்த்து பயப்படும் அளவிற்கு இருப்பது ஆந்தை. அதுவும் இரவு நேரங்களில் ஆந்தையை பார்த்தோமென்றால் அது ஏற்படுத்தும் பயங்கர தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவிற்க்கு பயமுறுத்தும் ஆந்தைதான் கியூட் ஆனா பறவைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆந்தைகளுக்கு கண்கள் ஏன் பெருசாக இருக்கிறது. ஆந்தைகள் ஏன் இரவு நேரங்களில் மட்டும் வருகிறது? ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது என்று சொல்லப்படுகிறதே அது உண்மையா? ஆந்தைக்கு காதுகள் இருக்கிறது உண்மையா? இது போன்ற ஆந்தையின் பல சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆந்தை ஒரு (Nocturnal bird) – இரவாடிகள் என்று தமிழில் சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் மட்டும் வெளியே வந்து வேட்டையாட கூடியதுதான் இந்த ஆந்தைகள். ஏன்னென்றால் ஆந்தைகள் இரவு நேரங்களில் மட்டும் வெளியே வந்து வேட்டையாட கூடிய பரிணாமத்தில் இருப்பதே இதற்கு காரணம். அதாவது பெரிய பெரிய வேட்டையாடி பறவைகளான கழுகு மாதிரியான பறவைகளிடம் போட்டி போட முடியாமல் இரவு நேரங்களில் வேட்டையாடினால் நமக்கு போட்டி இல்லாமல் இரையை தேடலாம் என்று முடிவுகொண்டு இரவில் வேட்டையாடும் பழக்கத்திற்கு வந்துவிட்டது ஆந்தைகள். இதனால் இதனுடைய உணவு முறை மாறிவிட்டது.

இரவில் வரக்கூடிய எலிகள், பூச்சிகளை மட்டுமே வேட்டையாடும் பழக்கத்திற்கு வந்துவிட்டது இந்த ஆந்தைகள். சில ஆந்தைகள் பகலிலும் தனக்குரிய இரையை வேட்டையாடும் தன்மைக்கொண்டது இதன் பெயர் டையூனல் (Diurnal) என்று சொல்லப்படுகிறது.

ஆந்தைகளின் வகைகள்:

உலகில் மொத்தம் 200 கும் மேற்பட்ட ஆந்தைகள் இருக்கின்றது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 200 கும் மேற்பட்ட ஆந்தைகளில் ஆசிய பகுதிகளில்தான் அதிக அளவிற்கு ஆந்தைகள் இருக்கிறது. இந்த ஆந்தைகளை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர்.

1.டைட்டானிடே (Tytonidae),

2.ஸ்ட்ரீக்கிடே (Strigidae)

இந்த ஸ்ட்ரீக்கிடே என்னும் குடும்பத்தின் கீழ்த்தான் 200 கும் மேற்பட்ட ஆந்தைகள் வகை படுத்தப்பட்டுள்ளது. பிற ஆந்தைகளை டைட்டானிடே குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப் படுகிறது. இந்த இரண்டு ஆந்தை இனங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசமாக இருப்பது அதனுடைய முக அமைப்புதான். ஆந்தைகளிலேயே மிகவும் சிறிய வகையான ஆந்தை எல் அவுல் (Ele owl) இதன் அளவு 6 அங்குலம் தான் இருக்கும். அதேபோல் பெரிய அளவிலான ஆந்தை கிரேட் கிரே அவுல் (Great grey owl) இது 32 அங்குலம் வரை வளரக்கூடியது.

ஆந்தைகளின் பார்வைத்திறன்:

இரவு நேரங்களில் மட்டும் ஆந்தைகள் வெளியே வருவதால் அவற்றிற்கு பகலில் கண்கள் தெரியாது என்று சொல்லப்படுகிறது. ஆந்தைகளுக்கு பகலிலும் கண்கள் நன்றாக தெரியும். மனிதர்கள் மாதிரியே முகத்தில் நேரடியாக இரு கண்கள் கொண்ட பறவை எதுவென்றால் அது ஆந்தைகள்தான். மனிதர்களை போன்று கண்கள் இருந்தாலும், மனிதர்களின் கண்களுக்கும் ஆந்தையின் கண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

ஆந்தைகளின் கண்கள் அமைப்பு ஒரு குழாய் வடிவில் அமைத்திருக்கிறது. இதற்கு கரு விழிகள் கிடையாது. நேரடியான ஒரு டுயூப் போன்ற அமைப்பில் தான் கண்கள் இருக்கிறது. அந்த கண்கள் எந்த இடத்தில் பொருள் இருக்கிறது என்பதை சரியாக கணிப்பதற்கு ஏதுவாக கண்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும். அதை அடிப்படையாக வைத்துதான் அவை பொருட்களை கணிக்கிறது. இதில் முக்கியமானவை என்னவென்றால் ஆந்தைகளுக்கு தூரத்தில் இருக்கக் கூடிய பொருட்கள் தான் நன்றாக தெரியும்.

அருகில் இருக்கும் பொருட்கள் அவ்வளவு தெளிவாக தெரியாது. இதனால் ஆந்தைகளுக்கு தூர பார்வை இருக்கிறது என்றும் சொல்லலாம். இப்படி தூர பார்வை இருப்பதாலே இதற்கு பைனாகுலர் விஷன் என்றும் சொல்லப்படுகிறது. இப்படியொரு கண்கள் அமைப்பு இருப்பதால் அசைவுகளை சரியாக பார்ப்பதற்கு கண்களை நகர்த்தவோ, சுழற்றவோ முடியாது. ஆனால் அதன் கழுத்துக்கள் அதற்கு உதவுகிறது. ஆந்தையின் கழுத்து அமைப்பு என்பது அதற்கு வலது, இடது என்று இரண்டு பக்கமும் சேர்த்து 270 டிகிரி அளவிற்கு சுற்றி பார்க்க உதவி செய்கிறது. இப்படி சுத்தி பார்ப்பதுமின்றி மேலே, கீழே என்று ஏற்ற இறக்கத்துடன் பார்ப்பதற்கும் அந்த கழுத்து உதவி செய்கிறது.

நாம் எப்படி கண்களை சுழற்றி பார்க்கிறோமோ அதே போன்று ஆந்தைகள் தனது கழுத்துக்களை சுழற்றி பார்க்கிறது. ஆந்தைகளின் கண்களை பாதுகாக்கவே அதற்கு மூன்று வகையான கண் இமைகள் இருக்கிறது. ஒன்று கண்ணை சிமிட்டவும், 2. தூங்குவதற்கு, 3. கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ள. ஆந்தைகளின் கண்களுக்கு இருக்க கூடிய இன்னொரு சிறப்பு இரவு நேரங்களில் ஆந்தைகளுக்கு கண்பார்வை துல்லியமாக தெரியும்.

ஆந்தைகளின் கேட்கும்திறன்:

ஆந்தைகள் பார்ப்பதை விடவும் கேட்பதை வைத்துதான் வேட்டைக்கு தயாராகும். ஆந்தைகளுக்கு இருக்கக்கூடிய காதுகளின் அமைப்பு அவற்றிற்க்கு எந்த சத்தமாக இருந்தாலும் அவை தெளிவாக கேட்க உதவி செய்கிறது. ஆந்தைகளின் காதுகள் சமச்சீரற்ற (Asymmetric) வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது.

ஆந்தையின் தலையில் தனுடைய காதுகள் இருக்கும் அமைப்பும் வெவ்வேறு விதங்களில் தான் இருக்கும். இப்படி வெவ்வேறு இடங்களிலும், வெவ்வேறு அமைப்புகளிலும் காதுகள் இருப்பதால், எந்த திசையில் இருந்து ஒலி வந்தாலும் அந்த ஒலி எங்கிருந்து வந்திருக்கிறது என்றும், அது எந்த மாதிரியான ஒலி என்றும் மிக துல்லியமாக அவற்றால் கணிக்க முடிகிறது. அதுமட்டுமின்றி அந்த சத்தத்தை இன்னும் துல்லியமாக கேட்க ஆந்தையின் முக அமைப்பும் அதற்கு உதவுகிறது.

ஆந்தையின் இறகுகள்:

ஆந்தைகள் துல்லியமாக வேட்டையாட அதனுடைய கண்களும், காதுகளும் எப்படி உதவுகிறதோ அதே போன்று அதற்கு பெரும் உதவியாக இருப்பது அதனுடைய இறக்கைகள். ஆந்தைகளால் சிறிதும் சத்தம் இன்றி அமைதியாக பறக்க முடியும். இப்படி பார்ப்பதால் தான் இறைகளுக்கு சந்தேகமின்றி பறந்து சென்று அவற்றை வேட்டையாட முடிகிறது. இவ்வளவு அமைதியாக ஆந்தைகள் பறக்க அதனுடைய இறக்கைகள் தான் காரணம்.

நாம் பயன்படுத்தும் சீப்புகளில் உள்ள பல் அமைப்புகளை போல ஆந்தையின் இறக்கைகளிலும் பல் அமைப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி மற்ற பறவைகளின் இறகுகள் போல் இல்லாமல் ஆந்தைகளின் இறக்கை அமைப்புகளும் வித்தியாசப்படுகிறது. இந்த வித்தியாசங்கள் இருப்பதால்தான் ஆமைகளால் அமைதியாக பறக்க முடிகிறது. இதற்காகத்தான் ஆந்தைகள் வருடத்திற்கு ஒருமுறை இறக்கைகளை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

ஆந்தையின் பிற திறமைகள்:

ஆந்தைகளுக்கு சைகோடேக்டைல்ஸ் (Zygodactyl) பாதம் இருக்கிறது. சைகோடேக்டைல்ஸ் என்பது முன் பகுதியில் இரண்டு விரல்கள், பின் பகுதியில் இரண்டு விரல்கள் என்று இருக்கிறது. இந்த பாத அமைப்பை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் அவற்றால் கெட்டியாக பிடிக்க முடியும்.

ஆந்தைகளுக்கு கால்கள் நீண்டு இருந்தாலும் அது மரத்தில் அமர்ந்திருக்கும் நிலை வயிற்றோடு ஒட்டி இருப்பதால் அவைகளுக்கு கால்கள் இல்லாதவாறு தெரியும். ஆனால் அவைகள் பறக்கும்போது அவற்றின் கால்களின் அளவை காணமுடியும். இயற்கையாக படைத்த உளவாளி எது என்றால் ஆந்தையை கூறலாம்.ஏனெனில், சூழலுக்கு ஏற்ப ஆந்தைகள் வாழக்கூடிய நில பரப்பிற்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொள்ளுகிறது. அதற்கேற்ப இதன் இறகுகளும் வடிவமைந்துள்ளது. ஆந்தைகளுக்கு கூடுகள் கட்ட தெரியாது. மற்ற பறவைகள் கட்டிய கூடுகளைத்தான் ஆந்தைகள் முட்டைகள் இடுவதற்கு பயன்படுத்தும்.

ஒரே சமயத்தில் இரண்டு முட்டைகளை இடும். முட்டைகளில் இருந்து வெளிவந்து வளரும் குஞ்சிகள் பறக்கும் திறன் வந்ததும் கூட்டை விட்டு வெளியே பறந்தது விடும். இப்படி வெளியே பறந்து செல்லும் ஆந்தையானது 20 லிருந்து 25 வருடங்கள் வரை உயிர் வாழ முடியும்.

ஆந்தைகள் மண் புழுவிற்கு இணையாக விவசாயிகளின் நண்பன் என்றும் கூறலாம். ஏன்னெனில் விவசாயத்திற்கு கேடுவிளைவிக்கக் கூடிய எலி, பூச்சிகள் என்று எல்லாவற்றையுமே பெரிய அளவிற்கு வேட்டையாடி விவசாயத்தை பாதுகாத்து செழிக்கவைக்க உதவுகிறது. அதே போன்று ஆந்தைகளைப் பற்றிய இன்னொரு மித்து ஆந்தைகளுக்கு நீச்சல் தெரியாது, தண்ணீரில் விழுந்தால் இறந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி ஆந்தைகளை வைத்து பல கற்பனை கதாபாத்திரங்களும்,கார்ட்டூன்களும் திரைப்படங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஆந்தைகளின் சிறப்புகளாக கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply