Japan Launch The World's First Wooden Satellite : ஜப்பான் உலகின் முதல் மர செயற்கைகோளை உருவாகியுள்ளது

ஜப்பானிய விஞ்ஞானிகள் அமெரிக்கா நாசா உடன் இணைந்து முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய “லிக்னோசாட்” செயற்கைக்கோளை (Japan Launch The World’s First Wooden Satellite) உருவாக்கியுள்ளனர். நாம் நீண்ட காலமாக பார்த்து வரும் அனைத்து செயற்கைக்கோள்களும்  அலுமினியத்தால் செய்யப்படுபவை.  தற்போது வரை கிட்டதட்ட 5000 செயற்கைக்கோள்கள் பூமிக்கு வெளியே வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தற்போது புதிதாக மரத்தால் ஆன செயற்கைக்கோள்களை அறிமுகம் செய்ய அறிவியல் உலகம் தயாராகிவிட்டது.

Japan Launch The World's First Wooden Satellite - புதிய வரலாறு படைக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள் :

ஜப்பானிய விஞ்ஞானிகள் மற்றும் நாசா விஞ்ஞானிகள் “லிக்னோசாட்” என்ற செயற்கைகோளை மாக்னோலியா மரத்தைக்கொண்டு உருவாக்கியுள்ளனர். இனிவரும் காலங்களில் இத்தகைய மரத்தால் உருவாக்கப்படும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளனர். விரைவில் உலகின் முதல் மர செயற்கைகோளை விண்ணில் செலுத்த ஜப்பான் (Japan Launch The World’s First Wooden Satellite) தயாராக உள்ளது.

ஓசோன் படலத்திற்கு சிக்கல் :

விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைகோள்கள் தனது ஆயுட்காலத்தை முடித்த பிறகு அங்கேயே சுழன்றுக்கொண்டிருந்தன. இதனால் விண்வெளியில் தற்போது அதிகளவு குப்பைகள் சேரத் துவங்கின. இதற்காக  விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த குப்பைகளை அழிக்கும் பொருட்டு  காலாவதியான செயற்கைகோள்களை வளிமண்டலத்திற்குள் கொண்டுவந்து அதை எரித்து பிறகு கடலில் விழச்செய்கின்றனர். இதில் செயற்கைகோளின் பாகங்கள் முழுவதும் அலுமினியத்தால் செய்யப்படுவதால் இத்தகைய செயற்கைக்கோள் வளிமண்டலத்தை அடைந்து எரியும் பொழுது அதில் இருக்கும் அலுமினிய துகள்கள் வளிமண்டலத்தில் மிதக்கிறது. இந்த அலுமினிய துகள்களால் ஓசோன் படலம் மட்டுமல்லாமல் பூமியின் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்று என்று ஜப்பானிய விண்வெளி வீரரும் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியாளருமான Takao Doi எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மர செயற்கைக்கோளின் முக்கியத்துவம் :

ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுமிட்டோமோ ஃபாரெஸ்ட்ரி என்ற நிறுவனமும் இணைந்து மக்கும் பொருளான மரக்கட்டைகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி (Japan Launch The World’s First Wooden Satellite) செயற்கைகோள்களை உருவாக்க திட்டமிட்டனர். அதன்படி பல்வேறு மரங்களை ஆராய்ச்சிசெய்து முடிவில் மாக்னோலியா மரமானது இதற்கு தகுதியானதாக இருந்தது. அதன் அடிப்படையில் இப்பொழுது “லிக்னோசாட் செயற்கைகோள்” முழுவதும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளை சர்வதேச விண்வெளி நிலையத்தில் International Space Station (ISS) மேற்கொள்ளப்பட்ட பலகட்ட சோதனைகளில் இறுதியாக நிலையானதாகவும் விரிசலை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் இருப்பதை  கண்டறியப்பட்டது.

மரத்தினால் செய்யப்படுகின்ற இந்த செயற்கைக்கோளானது (Japan Launch The World’s First Wooden Satellite) புவியீர்ப்பு விசை மற்றும் காற்று இல்லாத விண்வெளியில் மக்காது மற்றும் அழுகாது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் தனது ஆயுட்கால முடிவில் வளிமண்டல உரசலில் எரிந்து தானாகவே சாம்பலாகிவிடும். மேலும் எரியும் பொழுது அதிலிருந்து கார்பண்டை ஆக்ஸைடு மட்டுமே வருவதால் வளிமண்டலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1957-ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஸ்புட்னிக் 1 என்கின்ற முதல் செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு 2009 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் பூமியை சுற்றி இருக்கும் கோளப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. ஆனால் இதுவரை எந்தவொரு  நாடும்  மரத்தினால் செய்யப்பட்ட செயற்கைக்கோளை (Japan Launch The World’s First Wooden Satellite) விண்வெளியில் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply