தனியார் நிறுவனம் அனுப்பிய Odysseus Spacecraft நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது

அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. தனியார் நிறுவனத்தின் விண்கலம் (Odysseus Spacecraft) நிலவில் தரையிறங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த சாட்டிலைட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. இந்த முறை நிலவில் தரையிறங்கியது நாசா விண்கலம் இல்லை. மாறாக ஹூஸ்டனை சேர்ந்த தனியார் நிறுவனம் அனுப்பிய ஒடிஸியஸ் விண்கலம் (Odysseus Spacecraft) தான் இப்போது நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.

தனியார் விண்கலம் :

அமெரிக்காவின் நாசாவின் நிதியுதவியுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ஒடிஸியஸ் விண்கலத்தில் நிலவு குறித்து ஆய்வு செய்வதற்கு பல வகை ரோபோக்கள் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தில் இருந்து தற்போது லேசான சிக்னல் கிடைப்பதாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒடிஸியஸ் லேண்டர் இப்போது முழுமையாகச் செயல்படும் நிலையில் இருக்கிறதா? என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று  நாசா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அறுகோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒடிஸியஸ் விண்கலம் நிலவின் அருகே சென்றதும் தனது வேகத்தைப் பல மடங்கு குறைத்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மிக மெதுவாகச் சென்ற அந்த விண்கலம் சந்திரனின் தென் துருவ பகுதிக்கு அருகே தரையிறங்கியது. இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை இந்த விண்கலம் தரையிறங்கி உள்ளது.

Odysseus Spacecraft :

இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்னும் ஒடிஸியஸ் விண்கலத்தில் (Odysseus Spacecraft) இருந்து தெளிவான சிக்னல்கள் வரவில்லை என்பதால் எதுவுமே உறுதியாகத் தெரியவில்லை. ஒடிஸியஸ் விண்கலத்தில் இருந்து முதற்கட்டமாக லேசான சிக்னல்கள் வந்துள்ள நிலையில் இதுவே மிகப்பெரிய வெற்றி என்று நாசா ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “எங்கள் கருவிகள் சந்திரனின் மேற்பரப்பில் உள்ளது என்பதை சந்தேகமே இல்லாமல் எங்களால் கூற முடியும். இதற்காக நான் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்” என்று நாசாவின் மூத்த விஞ்ஞானி தெரிவித்தார். மேலும் கடந்த மாதம் அமெரிக்க நிறுவனம் அனுப்பிய மற்றொரு விண்கலம் நிலவில் தரையிறங்க முயன்ற போதிலும் அது தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா 1960-களிலும், 1970-களிலும் நிலவை பற்றி ஆய்வு செய்யத் தொடர்ச்சியாக பல்வேறு விண்கலங்களை அனுப்பியது. இதில் கடைசியாகக் கடந்த 1972-இல் அமெரிக்கா அதன் அப்பல்லோ 17 திட்டத்தின் மூலம் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இப்போது சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனியார் நிறுவனம் மூலம் விண்கலத்தை நிலவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில் “வரும் காலங்களில் நமது விண்வெளி வீரர்கள் செல்லும் நிலவின் தென் துருவத்தில் என்ன மாதிரியான சூழல் இருக்கிறது என்பதைக் பற்றி கண்டறிவதே இந்த ஒடிஸியஸ் மிஷனின் முக்கியமான நோக்கமாகும்.

மேலும் அங்கு என்ன வகையான தூசி இருக்கிறது. அது எந்த அளவுக்கு சூடாகவோ  அல்லது குளிராகவோ இருக்கிறது மற்றும்  கதிர்வீச்சு சூழல் என்ன? ஆகியவற்றை மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முன்பே கண்டறிவதே இதன் நோக்கம் என்றார். அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 இந்த ஆண்டில் மீண்டும் விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்ப உள்ளது. அதற்கு முன்பு பல விதமான சோதனைகளை நாசா நடத்தி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாகவே இந்த தனியார் விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. வரும் காலங்களில் செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களை ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply