Kalki 2898 AD Box Office Collection : கல்கி 2898 AD படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் வசூல் நிலவரம் (Kalki 2898 AD Box Office Collection) வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில், தற்போது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமாகி வரும் படம் தான் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த கல்கி 2898 AD ஆகும். ரூபாய் 600 கோடி பட்ஜெட்டில் இந்திய அளவில் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் படம் கல்கி 2898 AD. இதற்கு முன்னர் பிரம்மாண்டமான பொருட்செலவில் பல படங்கள் வெளிவந்தாலும் கல்கி படத்திற்கு செலவழித்த தொகை மற்ற படங்களை விட அதிகம். இது வெறும் படமாக மட்டும் இல்லாமல் இந்த முதல் பாகத்தை மையமாக வைத்து கல்கி சினிமாட்டிக் யூனிவர்ஸ் வெளிவர உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பசுபதி, அன்னாபென் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தைப் பாராட்டிய பெரும்பாலான ரசிகர்கள் சந்தோஷ் நாராயணனின் இசையையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பைப் போலவே மற்ற நாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்திற்கு ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, யாஷ், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அபிஷேக் பச்சன் என இந்தியப் பிரபலங்கள் பலர் படத்தை பாராட்டினர். குறிப்பாக படத்தின் மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மகாபாரதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும், படம் புரியவில்லை என சில ரசிகர்கள் கூறினாலும், படத்தின் மேக்கிங் திருப்தியாக இருப்பதாக அதே ரசிகர்கள் கூறுகின்றனர்.

Kalki 2898 AD Box Office Collection :

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 27 ஆம் தேதி வெளியான கல்கி படம் முதல் நாளில் மட்டும் 191.5 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படம் இரண்டு நாட்களில் 298.5 கோடிகளை வசூலித்துள்ளது. இப்படம் முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.555 கோடிகளை வசூலித்துள்ளது. இந்நிலையில், முன்பதிவு காலத்திலேயே வடஅமெரிக்காவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படம் வட அமெரிக்காவில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக (Kalki 2898 AD Box Office Collection) அறிவித்துள்ளது.

மேலும் இப்படம் பிரிட்டனில் மலையாளத்தில் வரும் 5 ஆம் தேதி முதல் திரையிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் கேரள ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இதேபோல், ரஷ்யாவில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபிள்களுக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் 5வது நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், படத்தின் 5வது நாள் வசூல் விவரத்தை பல்வேறு இணையதளங்கள் படத்தின் வசூல் குறித்து வெளியிட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் படம் ஐந்தாவது நாளில் கிட்டத்தட்ட 84 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய ரூ.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.45 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல், 6வது நாள் வசூல் தகவலை சாக்னிக் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இப்படம் இந்தியா முழுவதும் சுமார் 28 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியில் ரூ.14 கோடிக்கும் அதிகமாகவும், தெலுங்கில் கிட்டத்தட்ட ரூ.12 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தவிர தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா ரூ.1.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் படம் முதல் 6 நாட்களில் கிட்டத்தட்ட 700 கோடி வசூல் (Kalki 2898 AD Box Office Collection) செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply