Rajinikanth And Kapil Dev In Lal Salam Movie: கபில் தேவ் உடன் நடிக்கும் ரஜினிகாந்த்
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் படத்தில் மெயின் கேமியோவாக ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் பக்காவான மும்பை டானாக வருகிறார்.
கபில் தேவ் உடன் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கபில்தேவ் உடனான அதே புகைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அது இந்தியாவில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் எப்படி கபில்தேவின் தீவிர ரசிகரோ கபில்தேவும் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் இந்தியாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் இணைந்து நடிப்பது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
அதிலும் நடிகர் ரஜினிகாந்தின் பழைய ஹேர்ஸ்டைலில் இருக்கும் மொய்தின் பாய் லுக் ரசிகர்களை கோல மாஸ் தலைவரே என்று சொல்ல வைத்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வாருகிறார். ரஜினிகாந்த், கபில்தேவ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கேமியோவில் கலக்க காத்திருக்கின்றனர்.
ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படம்
மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகவும் ரஜினிகாந்த மற்றும் கபில் தேவுடன் பணியாற்றிய அனுபவத்தை மறக்கவே முடியாது என சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா படக்குழுவில் உள்ளவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட்10 ஆம் தேதி ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக தீபாவளிக்கு லால் சலாம் திரைக்கு வருமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
ரஜினியின் கதாபாத்திரமான மொய்தீன் பாய் பெயருடன் 08.05.2023 அன்று நள்ளிரவில் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடமிருந்து இணையத்தின் கருத்துப் பிரிவில் இந்த போஸ்டர் கலவையான வரவேற்பை மற்றும் கருத்து பரிமாறல்களை பெற்றது.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு இல்லால் சலாம் இயக்கத்திற்குத் திரும்புகிறார். ஐஸ்வர்யா, 3, வை ராஜா வை போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். 1993 இல் பம்பாயில் (இப்போது மும்பை) நடந்த வகுப்புவாத கலவரத்தை லால் சலாம் அடிப்படை கதையாக கொண்டது என்று கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு Nov 5 அன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் முக்கிய வேடங்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கின்றனர். பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பையும், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
நடிகர் ரஜினி மொய்தீன் பாயாக நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்திற்கு இசை பணிகளைத் தொடங்குவதற்கு முன், ஏஆர் ரஹ்மான் ரஜினிகாந்துடன் இணைந்து கடப்பா தர்காவுக்குச் சென்றார். படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையில் நடைபெறவுள்ளது. குழு ஏற்கனவே ஒரு அட்டவணையின் படப்பிடிப்பை முடித்துவிட்டது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் தோற்றத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. நள்ளிரவில் ரஜினியின் கதாபாத்திரமான மொய்தீன் பாய் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இறுதியாக அவரது கதாபாத்திரத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தபோது,
ட்விட்டரில் ஏமாற்றத்தை வெளிப்படுய ரசிகர்கள்
- “எங்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள்பெயர் கூட இல்லாத இந்த போஸ்டர் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.”
- போஸ்டரில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் தரம் தரக்குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
- ஒரு பயனர் இது வெறுமனே “அவமானம்” என்று கூறியுள்ளார்.
- அனைவருக்கும் பிடித்த BHAI மீண்டும் மும்பைக்கு வந்துவிட்டார்.
- இது யாரோ மொஹைதீன் பிரியாணி உரிமையாளரின் வாழ்க்கை வரலாற்று போஸ்டர் போல் தெரிகிறது.
- இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இனி வரும் போஸ்டர்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
- ரஜினியின் போஸ்டருக்கு ‘ஏமாற்றம்’ நெட்டிசன்கள் பதிலடிகள் மற்றும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
இந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் இந்தப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
This Post Has 2 Comments
Thank You For Your Interesting update 👍
Thank You So Much for Your Comment