Green Signal For Tata's Rs 91000 Crore Project-ற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
Cabinet Gives Green Signal To Tata’s Rs 91,000 Crore Chip Foundry Project :
இந்தியா ஆனது உலகின் பிற முக்கிய பொருளாதாரங்களுக்கு ஏற்ப தனது வணிக மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக சிப் அசெம்பிளி மற்றும் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதற்கு கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரூ.91,000 கோடி சிப் ஃபவுண்டரி திட்டத்திற்கு அமைச்சரவை பச்சை விளக்கு (Green Signal For Tata's Rs 91000 Crore Project) :
கடந்த 25/04/2024 அன்று இந்தியாவின் நீண்டகால லட்சியத்திற்கு வழி வகுக்கும் Tata குழுமத்தின் 91,000 கோடி முதலீட்டு Semiconductor ஃபவுண்டரியை அமைக்கும் திட்டத்திற்கு (Green Signal For Tata’s Rs 91000 Crore Project) ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இது ஆண்டுக்கு 300 கோடி சில்லுகளை உற்பத்தி செய்யும். உயர் செயல்திறன் சில்லுகளை ஃபவுண்டரி 28, 50, 55, மற்றும் 90 மற்றும் 110 நானோமீட்டர் வகைகளில் உற்பத்தி செய்யும்.
இந்த உற்பத்தி ஆனது உயர்-பவர் கம்ப்யூட், மின்சார வாகனங்கள், டெலிகாம், பாதுகாப்பு, நுகர்வோர் மின்னணுவியல், ஆட்டோமொபைல் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்யும். ஃபவுண்டரி யூனிட்டை அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்தியா இப்போது செமிகண்டக்டர் சந்தையில் ஒரு தீவிர வீரராக உலகளவில் பார்க்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்து உள்ளார்.
Powerchip Semiconductor Manufacturing Corporation (PSMC) உடன் கூட்டு முயற்சி :
டாடா குழும நிறுவனமான Tata Electronics ஆனது தைவானின் சிப் தயாரிப்பு நிறுவனமான Powerchip Semiconductor Manufacturing Corporation (PSMC) உடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. டாடா குழுமத்தின் டாடா செமிகண்டக்டர் அசெம்ப்ளி அண்ட் டெஸ்டில் (TSAT) இருந்து அசெம்பிளி, டெஸ்டிங், மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் (ATMP) யூனிட்டை அசாமில் அமைப்பதற்கான இரண்டு முன்மொழிவுகளுக்கும், CG Power-Renesas இணைப்பிலிருந்து ஒன்றும், மோரிகானில் தங்கள் அலகுகளை சனந்த் குஜராத்தில் அமைக்கும் இரண்டு திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. TSAT திட்டம் ரூ.27,000 கோடி ஆகும். CG Power-Renesas திட்டம் ரூ.7,600 கோடி ஆகும். ஒட்டுமொத்தமாக 1,26,000 கோடி முதலீட்டை உள்ளடக்கிய மூன்று திட்டங்களில் ரூ.47,704 கோடியை மானியங்கள் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொள்ளும். மொத்தத்தில் 26,000 மேம்பட்ட தொழில்நுட்ப வேலைகளையும் ஒரு லட்சம் மறைமுக வேலைகளையும் உருவாக்கும்.
PSMC குழுமத் தலைவர் ஃபிராங்க் ஹுவாங் உரை :
PSMC குழுமத் தலைவர் ஃபிராங்க் ஹுவாங், “இந்திய நாட்டில் பல துறைகளில் முன்னோடியாக இருக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள டாடா குழுமத்தின் செமிகண்டக்டர் ஃபேப்ரிக்கேஷனில் எங்கள் PSMC குழு நுழைவு பெருமை சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் சரியான நேரத்தில் நுழைந்துள்ளது” என்று கூறினார்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்