Micron Investment In India : முதல் செமிகண்டக்டர் ஆலையை அமைக்க உள்ளது

Micron Investment In India :

இந்தியாவில் உள்ள டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆனது தைவான் நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சிப் தயாரிக்கும் ஆலைகளை நிறுவி வருகின்றன. இந்நிலையில் சிப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் Memory Chips தயாரிப்பாளரான மைக்ரான் டெக்னாலஜி இன்க் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மைக்ரான் டெக்னாலஜி இன்க் நிறுவனம் ஆனது தென் கொரியாவின் Samsung Electronics Co மற்றும் SK Hynix Inc உடன் போட்டியிட்டு கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் குறுகிய கால நினைவகத்தை வழங்கும் சிப்களை விற்பனை செய்கிறது.

தற்போது மைக்ரான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 3500 பேர் பணி புரிகின்றனர். இந்நிலையில் மைக்ரான் நிறுவனம் குஜராத்தில் தங்களது முதல் செமிகண்டக்டர் ஆலையை (Micron Investment In India) விரைவில் மிகப்பெரிய அளவில் அமைக்க இருப்பதாக கூறியுள்ளது. மிகப்பெரிய அளவில் வரவிருக்கும் இந்த ஆலையில் முதல்கட்டமாக சிப்புகளை சோதனை செய்வது, சிப்புகளை பொருத்துவது  மற்றும் சிப்புகளை பேக் செய்வது ஆகிய பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மைக்ரான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமமூர்த்தி அறிவிப்பு :

மைக்ரான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமமூர்த்தி, “குஜராத்தின் சனந்தில் உள்ள மைக்ரான் டெக்னாலஜியின் பேக்கேஜிங் யூனிட்டில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் குறைக்கடத்தி சில்லுகள் 2025 ஆம் ஆண்டின் (Micron Investment In India) முதல் பாதியில் வெளிவரும் என்றும் சனந்தில் தயாரிக்கப்படும் சில்லுகளில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் இது உலகளாவிய குறைக்கடத்தி சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காக மாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்த துறையில் நல்ல வளர்ச்சி பெற கூடிய நாடாக இந்தியாவை காண்பதால் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய இருக்கிறோம் என்றும், இந்த நம்பிக்கையில் தங்கள் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த குறைக்கடத்தி சில்லுகள் ஆனது ஸ்மார்ட்போன்கள், தரவு மையங்கள், நோட்புக்குகள் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

உலகளவில் தற்போது எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் பயன்படுத்தப்படும் சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தைவான் நாடு தான் உலகிற்கு தேவையான சிப்களில் பெரும்பாலானவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவும் தற்போது சிப் அல்லது செமி கண்டக்டர்கள் (Micron Investment In India) உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply